பெசிலியோமைசிஸ் என்பது என்னவென்று பார்க்கலாம்

பெசிலியோமைசிஸ் என்பது என்னவென்று பார்க்கலாம்
பெசிலியோமைசிஸ் என்பது பயிர்களில் வேரில் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணமாகும்.
பெசிலியோமைசிஸை எந்தெந்த பயிர்களில் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோம்
பெசிலியோமைசிஸை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பெசிலியோமைசிஸை பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்
பெசிலியோமைசிஸை விதைநேர்த்தி செய்யலாம், அடியுரமாக போடலாம், நாற்று, கிழுங்கு நேர்த்தி செய்யலாம், வேரிமூலம் ஊற்றலாம்
பெசிலியோமைசிஸை எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாம்
பெசிலியோமைசிஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவுடரை ஆறிய அரிசி வடிகஞ்சி 100 மில்லி;யுடன் கலந்து விதைநேர்த்தி செய்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்.
பெசிலியோமைசிஸை அடியுரமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்
பெசிலியோமைசிஸ் 2 முதல் 3 கிலோ பவுடரை 100 கிலோ இயற்கை உரத்துடன் ( சாண உரம்) கலந்து 10 முதல் 15 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடி வைத்து பிறகு அடியுரமாக இடலாம்.
நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பெசிலியோமைசிஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து செடியைச் சுற்றி ஊற்றி விட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories