பொரியல் தட்டைப்பயிர் சாகுபடி தொழில் நுட்பம்

பொரியல் தட்டைப்பயிர் சாகுபடி தொழில் நுட்பம்
பட்டம்
ஆண்டுமுழுவதும் நடவு செய்யலாம்
விதையளவு
ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை
விதை நேர்த்தி
200 கிராம் ரைசோபியம், 200கிராம் பாஸ்போபாக்டீரியா,
200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி மூன்றையும் ஆறிய
வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி 24 மணி
நேரத்திற்குள் நடவு செய்ய வேண்டும்
நிலம் தயாரித்தல் :
3 முதல் 4 உழவுகள் வரை போடவேண்டும்
தொழுவரம் :
4 டன் மக்கிய தொழுஎரு / ஏக்கர்
அடியுரம் :
டி.ஏ.பி 50 கிலோ / ஏக்கர்
உயிர் உரம்
2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா,
2 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி மக்கிய ஆறிய எரு
50 கிலோவுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது
தூவவேண்டும்
நுண்ணூட்டம்
பயிர்வகை நுண்ணுரம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ 20 கிலோ
மணலுடன் கலந்து விதை விதைத்த பிறகு மேலே தூவிவிட வேண்டும்.
பயிர் இடைவெளி :
வரிசைக்கு வரிசை 2 அடி
செடிக்குச் செடி 1 அடி
களை நிர்வாகம்
பயிர் நடவு செய்த 15ம் நாள் முதல் களையும், 30ம் நாள்
இரண்டாவது களையும் ஆட்கள் மூலம் வெட்டி
கட்டுப்படுத்தலாம்
நீர் நிர்வாகம்
பயிர் நடவு செய்தவுடன் உயிர் தண்ணீரம் பிறகு வாரத்திற்கு
ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
பூச்சி நிர்வாகம்
அசுவிணி, நாவாய்ப்பூச்சி, பச்சைக்காய்ப்புழு, செம்பேன்
அசுவிணி தாக்குதலின் அறிகுறி
இலையின் அடிப்பகுதியிலும் நுனி செடியிலும் கூட்டம் கூட்டமாக இருக்கும். அசுவிணி, இல்லையில் உள்ள சாற்றை உறிஞ்சவதால் இலை வெளிறிக் காணப்படும்.செடியில் வளர்ச்சி இருக்காது.
கட்டுப்படுத்தும்முறை
அசுவிணி தாக்கிய செடியின் கொழுந்துகளை ஒடித்து விட வேண்டும்.
இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
சாகுபடி குறிப்பு
செடியில் கொளுந்து அதிகமாக ஓடிக்கொண்டிருக்கும் அவற்றை அதிகம் ஓடவிடாமல் வெட்டி கட்டுப்படுத்தலாம்
நாவாய்ப்பூச்சி தாக்குதலின் அறிகுறி
இந்த பூச்சியைத் தொட்டால் ஒரு வித துர்நாற்றம் அடிக்கும்.காயின் சாற்றை உறிஞ்சிவி;டுவதால் காய் பெருக்காமல் பார்ப்பதற்கு பிஞ்சாகவே இருக்கும். முற்றிய காயும் விதையில்லாமல் தோல் மாதிரி இருக்கும்
கட்டுப்படுத்தும்முறை
பாஸ்போமிடாண் அல்லது எண்டோசல்பான் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்
பச்சைக்காய்ப்புழு தாக்குதலின் அறிகுறி
காயில் துளையிட்டு சென்று உள்ளே பயறுகளை தின்னும் அதனால் காயில் வெறும் தோல் மட்டும் இருக்கும். தட்டப்பயிர் காயில் புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் இப்புழு தாக்கம் மிகுதியாக இருக்கும்.
கட்டுப்படுத்தும்முறை
விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சியை கவர்ந்து கட்டுப்படுத்தலாம் ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.
டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணிஅட்டை ஒரு ஏக்கருக்கு 4 சிசி கட்டி கட்டுப்படுத்தலாம்.
இனக்கவர்ச்சிப்பொறி ஒரு ஏக்கருக்கு 6 இடத்தில் வைத்து தாய்அந்துப் பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3மில்லி, அசிப்பேட் 2 கிராம், நிம்பசிடின் 3 மில்லி மூன்றையும் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்
செம்பேன் தாக்குதலின் அறிகுறி
செம்பேன் இலையின் அடிப்பகுதியில் ஊர்ந்து செல்லும் இலையின் சாற்றை உறிஞ்சுவதால் இலை விளிம்புகள் சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3மில்லி, அசிப்பேட் 2 கிராம், நிம்பசிடின் 3 மில்லி மூன்றையும் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்
வேர்அழுகல் தாக்குதலின் அறிகுறி
வேர்அழுகல் தாக்கிய செடி இளமஞ்சள் நிறமாகி வாடி காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும்முறை
விதை நடவு செய்யும் பெழுதே 30 கிலோ வேப்பம்புண்ணாக்கும் 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியும் காட்டில் ஈரம் இருக்கும் பொழுது தூவிவிட்டால் வேர்அழுகல் நோய்தாக்காது
முக்கியக்குறிப்பு
தட்டைப்பயிர் நடவு செய்தபிறகு நெல் நட்டால் மகசூல் அதிகமாக இருக்கும். இது பயிற் சுழற்சிக்கு ஏற்ற பயிர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories