மகசூலை அதிகரிக்க விதைகளின் முளைப்புத் திறனை அறிவது மிக முக்கியம்!

விதைகளில் இருக்கும் முளைப்புத் திறனை பரிசோதித்து பயிரிட்டால் மகசூலை அதிகரிக்கலாம். ஆகையால், விவசாயிகள் விதைகளை வேளாண் அலுவலங்களில் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒவ்வொரு பயிறுக்கும் எவ்வளவு முளைப்புத் திறன் இருக்க வேண்டும் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முளைப்புத் திறன் (Germination Capacity)
நெல், எள்ளில் 80 சதவீதம் முளைப்புத்திறன் இருக்க வேண்டும். பரிசோதனை செய்த பின் விதைத்தால் விளைச்சலை அதிகரிக்கலாம். அந்தந்த பயிர்களுக்கேற்ப முளைப்புத்திறன் சதவீதம் மாறுபடும். சோளம், கம்பு, கேழ்வரகு, பாசிப்பயறு, உளுந்து, துவரை, தட்டைப்பயறு, வீரியப்பருத்தி, பிரெஞ்சுபீன்ஸ், பீல்டுபீன்ஸ் 75 சதவீத முளைப்புத்திறன் தேவை இதில்

முள்ளங்கி, நிலக்கடலை, நூல்கோல், சூரியகாந்தி, வெங்காயம், கீரை, சீனி அவரை, முருங்கை, தக்காளி, கத்தரி 70 சதவீதம். ரகப்பருத்தி, கொத்தமல்லி, வெண்டை 65 சதவீதம் மற்றும் புடலை, பூசணி, பாகற்காய், கேரட், பீட்ரூட் 60 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டிருக்க வேண்டும். அதேபோல விதைகளில் கலப்பு இருக்கக்கூடாது. வெண்டையில் 99 சதவீத புறத்துாய்மை வேண்டும். கேழ்வரகு, எள்ளில் 97, நிலக்கடலை 96, காரட், கொத்தமல்லி 95, மற்றவையில் 98 சதவீதம் புறத்தூய்மை இருத்தல் வேண்டும் மற்றும்

விழிப்புணர்வு (Awareness)
விதைகளின் முளைப்புத் திறன் பற்றிய போதிய விழிப்புணர்வு விவசாயிகளிடையே இல்லை என்பது தான் உண்மை. இது பற்றிய விவரங்களை விவசாயிகள் நிச்சயம் அறிய வேண்டும். மகசூலை அதிகரிக்கும் நுட்பங்களில் முளைப்புத் திறனுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம் என்று கூறினார் .

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories