மக்காச்சோளம் நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து மண் புழு உரத்தை வைத்து மண் அணைக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும் வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை.
பெரும்பாலும் பூச்சி நோய் தாக்குதல் இருக்காது கதிர் வருவதற்கு முன்பாக பூச்சிகள் தாக்கினால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
தென்னை மரத்தில் சுளுக்கை எறும்பு அதிகமாக உள்ளது
வேப்பம் புண்ணாக்குஉடன் வேப்ப எண்ணெய்யை கலந்து மரத்தின் வேர்ப்பகுதியில் வைப்பதினால் எறும்புகளை கட்டுப்படுத்தலாம்.