மக்காச்சோள சாகுபடி முறைகள்

உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், மகசூல் குறைவு, செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களினால், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதித்து வருகின்றனர். கோழி மற்றும் மாட்டுத்தீவன உற்பத்தியில், அதிகளவு பயன்படுத்துவதால், மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்தது. நல்ல விலையும் கிடைத்து வந்ததால், அதிகளவு விவசாயிகள் ஆர்வமாக பயிரிட்டனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் மிகப்பெரிய பிரச்னையாக உருவானதோடு, மகசூல் குறைவு, நிலையான விலையில்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சாகுபடி பரப்பளவு பெருமளவு குறைந்தது.

மக்காச்சோளம் சாகுபடி (Maize Cultivation)
மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. வழக்கமாக, உடுமலை சுற்றுப்பகுதிகளில், 60 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.நடப்பு சீசனில், பி.ஏ.பி., அமராவதி பாசனம் மற்றும் மானாவாரி பாசனத்தில், ஏறத்தாழ, 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது என்றார்.

அறுவடை தீவிரம்உடுமலை பகுதியில், சாகுபடியாகும் மக்காச்சோளம் அறுவடை பணி, டிச., இறுதியில் துவங்கி, மார்ச் மாதம் வரை நீடிக்கும். தற்போது, உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, தினமும், 25 டன் வரத்து உட்பட, வியாபாரிகள், நிறுவனங்கள் கொள்முதல் என, 500 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு வருகிறது இதில்

அறுவடை துவங்கி, வரத்து அதிகரித்த நிலையிலும், ஒரு குவிண்டால், 1,800 ரூபாய் வரை விற்று வருகிறது என்று கூறினார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories