பருவம்
அனைத்து பருவத்திலும் பயிர் செய்யலாம். டிசம்பர் மாதம் ஏற்ற பருவமாகும்.
மண்
மணல் தவிர்த்து எல்லா வகை மண்ணிலும் வளரும்.
விதை அளவு
விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைக்க வேண்டும் .இலையை காயவைத்து விதையை சேகரித்து சாம்பலுடன் கலந்து பாத்திகளில் விதைகளை சீராக தூவ வேண்டும்.
நிலம் தயாரித்தல்
ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரத்துடன் நான்குடன் 4 டன்எருவை பரவலாககொட்டி உழவு செய்ய வேண்டும் .பிறகு அதில் தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
நடவு செய்தல்
கன்றுகள்30 சென்டிமீட்டர்x 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 சென்டி மீட்டர் வரை வளர்ந்து விடும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். மண்ணின் ஈரப்பதத்தை ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பயிரில் பூ வரும்வரை பாசனம் செய்ய வேண்டும். பாசனம் செய்யும்போது ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விடுவதால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.