மண்ணை வளமான மண்ணாக ஆக்க

மண்ணை வளமான மண்ணாக ஆக்க திரு. சுந்தரராம அய்யர்சொனன் கருத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம்
பொதுவாக நம்முடைய மண் வளமான மண்ணாக இருப்பதற்கு நுண்ணுயிரிகளின் செயல்பாடு 10 சதம் இருக்க வேண்டும்.
ஆனால் இப்பொழுது இரசாயன உரம், மருந்துகளை பயன்படுத்தி நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து 3 சதவீதம்தான் இருக்கிறது .
மீதம் உள்ள 7 சதவீத நுண்ணுயிர்களை நம்முடைய மண்ணில் உற்பத்தி செய்யனும் அப்பொழுதுதான் நம்முடைய மண் வளமானதாக இருக்கும்.
அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம முதலில் செய்யவேண்டியது பலவகை விதைகளை விதைத்து பூ எடுக்கும் சமையம் அல்லது 60 நாட்களில் மடக்கி உழவு செய்தல் வேண்டும்.
பலவகை விதைகள்
தானியப்பயிர்வகைகளில் – ஏதாவது 4
பயறுவகை பயிர்களில் – 4
எண்ணெய் வித்து பயிர்கள் – 4
தழைச்சத்து தரக்கூடய பயிர்கள் – 4
மணப்பயிர்கள் – 4 எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 30 கிலோ விற்கு மேல் விதைக்கவேண்டும்.
தானியப்பயிர்வகைகளில்- கம்பு 5 கிலோ, சோளம் – 3 கிலோ, மக்காச்சோளம் – 3 கிலோ, ராகி 1கிலோ
பயிர்வகை – கொள்ளு – 3 கிலோ, தட்டப்பயறு 3 கிலோ
எண்ணெய் வித்து – ஆமணக்கு 3 கிலோ, எள் – 1 கிலோ
தழைச்சத்து – சணப்பு – 4 கிலோ, தக்கபூண்டு – 4 கிலோ
மணப்பயிர் – கடுகு 1 கிலோ
மேலே உள்ள பயிர்களை தேர்ந்தெடுத்து
விதைக்கவேண்டும்.
இவற்றை ஏன் நாம விதைக்க வேண்டும்?
இவை நம்பகுதியில் ஈசியாக கிடைக்கக் கூடியவை. இந்த பயிர்கள் அனைத்தும் களைச் செடிக்கு மேல் வளரக் கூடிய பயிர்கள் என்பதால் இவற்றை நாம தேர்வு செய்து விதைக்கலாம்.
விதைத்த 60 நாட்களில் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கோரை, அருகு கூட வராது மண் வளமானதாக இருக்கும். தழைச்சத்து அதிகரிக்கும்
30 கிலோவிற்கு 3000 ஆயிரம் செலவு ஆகும்
ஆனால் இதில் கிடைப்பது 20 டன் தழைச்சத்து
கிடைக்கும்.
ஒரு டன் 1000ரூபாய் என்றால் கூட நமக்கு 20 ஆயிரம் கிடைக்கும்.
ஆகவே விவசாயிகளே இந்த மழையை பயன்படுத்தி மண்ணை வளப்படுத்துவோம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories