மண்புழு உயிர் உரம்-விபரங்கள் மற்றும் தயாரிப்பு முறைகள்

மண்புழு உயிர் உரம்-விபரங்கள் மற்றும் தயாரிப்பு முறைகள்
மண்புழு உயிர் உரம் என்பது மண்புழு கழிவுகளை குறிக்கும். சாணம், இலை, தழைகள் போன்றவற்றை மண்புழு உணவாக உட்கொண்டு கழிவுகளை வெளியேற்றுகிறது. இதை மண்புழு கழிவு, மண்புழு மட்கு (VERMI CASTING) மற்றும் மண்புழு உயிர் உரம் என்று கூறுகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்வரை நம் நிலத்திலும் நிறைய மண்புழுக்கள் இருந்து வந்தன. இந்த மண்புழுக்கள் எல்லாம் மண்ணிற்கு அளிக்கப்பட்டு வந்தது இயற்கை உரத்திலுள்ள சாணம், இலை,தழைகளை மற்றும் அங்கக பொருட்களை உணவாக உட்கொண்டு கழிவுகளை வெளியேற்றி இயற்கையாகவே மண்ணிற்கு சத்துக்களை சேர்த்து வந்தது.
தற்பொழுது நாம் அதிக அளவில் இரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதால் மண்புழுக்கள் உயிர் வாழ முடியாமல் மடிந்துவிட்டன.
இன்றைக்கு கூட இரசாயன உரம் அளிக்கப்படாத மரத்துக்கு அடியில் மண்ணை தோண்டி பார்த்ததால் மண்புழுக்களை காண முடியும். அப்படி மண்புழுக்கள் அதிகமுள்ள இடத்தில் மண்ணின் மேற்பரப்பில் கூர்ந்து கவனித்து பார்த்தால் சிறிய மண் குருணைகள் இருப்பதை பார்க்க முடியும். இது வேறொன்றுமல்ல மண்புழு கழிவு இயற்கையிலேயே நடைபெற்று வந்த ஒரு அற்புத செயலை அழித்ததன் விளைவாக இன்று நாம் மண்புழு உரத்தை தயார் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
மண்புழு உயிர் உரம் சோம்பு, சீரகம். போன்ற வடிவத்திலும் காபி கொட்டை நிறத்தில் இருக்கும். இந்த வடிவமும் நிறமும் மண்புழுக்களுக்கு அளிக்கப்படும் உணவிற்கு ஏற்ப சிறிது மாற்றம் ஏற்படும். இந்த உரத்திற்கு வாசனை மற்றும் நாற்றம் எதுவும் இருக்காது. பொதுவாகவே மண்புழு உரத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதாவது 25 முதல் 40 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும்.
நீர் இருப்பு வைக்கும் தன்மை இந்த உரத்திற்கு அதிகமானதால் ஒரு வருடம் வைத்திருந்தாலும் ஈரப்பதத்தை தக்க வைத்திருக்கும். மண்புழு உயிர் உரம் கார, அமில தன்மை அல்லாமல் நடுநிலைமையில் இருக்கும். மண்புழு உரம் மண்ணைவிட லேசாக இருக்கும். உதாரணத்திற்கு வடிகட்டிய டீ தூள் போல் இருக்கும்.
மண்புழு உரத்தில் நுண்ணுயிரிகள் மிக அபரிதமான வளர்ச்சி அடையும். அதனால் மண்புழு உரத்தில் சிறிது உயிர் உரங்கள் சேர்த்தாலே உயிர் உங்களில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிக அளவிற்கு பெருகி விடும். பொதுவாக மண்புழு உரத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை 10-10 என்ற இளவில் இருக்கும். அதனால் தான் இதை மண்புழு உயிர் உரம் என்று அழைக்கிறார்கள் போலிருக்கிறது.
மண்புழு உரத்தில் பயிருக்கு தேவையான பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்து மற்ற இயற்கை உரங்களை காட்டிலும் அதிக அளவில் உள்ளது.
மற்றும் நுண்ணூட்ட சத்துக்களான கால்சியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம், மெக்னீசியம், மேங்கனீசு ஆகியவை தேவையான அளவில் உள்ளது. இது மட்டுமில்லாமல் இதில் வளர்ச்சி ஊக்கிகளான ஜிப்ரலின்ஸ் ஆக்ஸின்ஸ் சைக்டோகினிக்ஸ் போன்றவையும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சி ஊக்கிகள் வேறு எந்த இயற்கை உரத்திலும் இருப்பதுமில்லை. இது மண்புழு உரத்திற்கே உள்ள ஒரு சிறப்பு அம்சம் இந்த சத்துக்கள் அனைத்தும் தாவரங்கள் உடனே எடுத்து கொள்ள கூடிய வடிவில் இருக்கிறது.
மண்புழு உரம் தயாரிப்பு
மண்புழு வளர்ப்பது மூன்று முறைகளில் வளர்க்கலாம் அவை தொட்டில்முறை. படுகை முறை, குழிமுறை வளர்க்கலாம் நாம தொட்டில் கட்டுவதற்கு பதிலாக சில்பாலின் சீட்டை பயன்படுத்தி தயாரிக்கலாம். இடம் நிழல்பாங்கான மேட்டு நிலமாக இருக்க வேண்டும்.
அதில் 30 அடி நீளம் 3அடி அகலம் 2 அடி உயரம் உள்ள சில்பாலின் சீட் வாங்கனும் ரூ. 500 வரும் ஒருடன் மாட்டு எருவை அதில் கொட்டி தண்ணீர் நன்றாக தெளித்து குளிர்ந்த நிலையில் வைத்திருக்கனும்.
அதில் ஒரு கிலோ மண்புழுவை விடனும் தினமும் காலை மாலை அவற்றில் தண்ணீர் தெளித்துக்கொண்டே இருக்கனும். சாணி இருந்தால் அவற்றில் கரைத்து ஊற்றலாம். 45 நாளில் மண்புழு நன்றாக அவற்றை தின்று காப்பிதூள் கலரில் மக்கிய துகள்களாக இருக்கும் நாம அவற்றை எடுப்பதற்கு இரண்டுநாட்களுக்கு முன்பு தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிடனும். புழு அடியில் போய்விடும் நாம மேலாக எருவை எடுத்து சலித்து விற்பனை செய்யலாம் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்றாலே நமக்கு நல்ல லாபதம்தான் விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம்.
50 கிலோ மண்புழு உரத்துடன் 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2கிலோ பாஸ்போபாக்டீரியா, 2கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ சூடோமோனஸ் இவற்றை கலந்து விவசாயத்திற்கு பயன்படுத்தினால் பூச்சி, பூஞ்சாண நோயிலிருந்து பயிரை பாதுகாக்கலாம். பயிருக்கு வேண்டிய அனைத்துவகை சத்துக்களும் மண்புழு உரத்தில் இருக்கிறது.
இந்த மண்புழு எருவை தொடர்ந்து 8 மாதம் வரை வைத்திருக்கலாம் அடுத்தடுத்து நாம தயாரித்துக்கொண்டே இருக்கலாம்.மண்புழுவில் 3000 ரகங்கள் இருந்த போதிலும் யூரிடிலஸ் யூஜினியே என்னும் ஆப்பிரிக்க ரகம் ஏற்றது. இவை மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை எருவை நன்றாக உண்டு வாழக்கூடியது. இவற்றின் இனப்பெருக்க விகிதமும் அதிகமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories