மண்புழு உரத்தின் பயன்கள்

மண்புழு கழிவு உரத்தில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும் பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்களும் உள்ளன. இதில் சாகுபடி செலவு குறையும்.

மண்புழு உரத்திறகு ஈரத்தை நிலை நிறுத்தும் திறன் இருப்பதால் பயிருக்கு நீர் பாய்ச்சும் இடைவெளி அதிகமாகி நீரை சேமிக்கும் திறன் உண்டு எனலாம்.

இதனை மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண் ஊட்டச் சத்துக்களையும் பற்றாக்குறை சரி செய்யப்படுகிறது.

மேலும் மண்ணில் தாவரங்களின் வேர்கள் எளிதில் ஊடுருவ வகை செய்கிறது.

இதனைப் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் சுற்றுப்புறச்சூழல் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் ஆகியவை அழிக்கப்படாமல் காக்கப்படுகிறது.

இதை கரும்பு, நெல், காப்பி, தேயிலை ,கோதுமை போன்ற பயிர்களுக்கு மட்டுமல்லாது, எல்லா பயிர்களுக்கும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். அளவு அதிகமானாலும் பயிருக்கு இதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories