மண்வளமே! செல்வ வளம்!!

மண்வளமே! செல்வ வளம்!!

நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறும், நம்முடைய சந்ததிகளை பாதிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதற்கு சிறந்த உதாரணம் பசுமைப் புரட்சி…
பசுமைப் புரட்சி என்ற பெயரில் செயற்கை உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் அதிக அளவில் பயன்படுத்தியதால், மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு, மளட்டுத் தன்மையாகவும், விசத்தன்மை கொண்டதாக மாறியுள்ளது. இதன் விளைவாக, விளைநிலங்ளில் விளைச்சல் குறைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது. தற்போது நாமும், நம்முடைய சந்ததிகளும் விசமுள்ள உணவுகளையே உண்ண நேரிட்டுள்ளது.
அறியாமையாலும், பேராசையாலும் இது நமக்கு நாமே வைத்துக் கொண்ட சூனியம். இதன் விளைவு, பல்வேறு நோய்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு, நம் சந்ததிகளையும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறோம்.
இவற்றைத் தடுத்திடவும், மண்வளத்தைக் காத்திடவும் “நம்மால் முடியும் பவுண்டேசன்” களமிறங்கியுள்ளது.
நம்மால் முடியும் பவுண்டேசன் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ” மண்வளம் காப்போம் ” திட்டத்தின் கீழ், மக்களுக்கு மண்வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், இயற்கை உரங்கள் தயாரிப்பு முறைகளை பயிற்றுவித்தும் வருகிறது.
மேலும் மண்புழு உரம் தயாரிப்பு பணிகளை ஊக்கப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. மண்வளம் காப்போம்! செல்வ வளம் பெறுவோம்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories