#மண் பரிசோதனை மற்றும் பாசன நீர் பரிசோதனை செய்ய

#மண் பரிசோதனை மற்றும் பாசன நீர்
பரிசோதனை செய்ய
பரிசோதனை செய்ய
மண் பரிசோதனை செய்ய வேண்டிய வயலில் கீழ்க்கண்ட இடங்களில் மண் மாதிரி எடுக்ககூடாது
எருக்குழி,கால்நடைகள் கட்டிய இடம், வரப்பு ஓரம்,மர நிழலடி இலைசருகுகள் கிடந்த இடம் (மக்கியது, மக்காத இலைகள்),ஓடைகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள்.முதலியவற்றில் மண்மாதிரி எடுக்கக் கூடாது.
மண் எடுக்கக்கூடிய இடங்களை தேர்வுசெய்து அதன் மேல்மண்ணை நீக்கிவிட்டு அதன்பிறகு V வடிவத்தில் மண் வெட்டியால் வெட்டனும் இவ்வாறு அரைஅடிஆழம் வெட்டியபிறகு அந்தமண்;ணை அப்புறப்படுத்திவிட்டு பிறகு இரும்பு சம்மந்தப்பட்ட எந்த ஒரு பொருளைக்கொண்டும் மண்சேகரிக்க கூடாது. கல் அல்லது குச்சியின் மூலம் வெட்டிய குழியில் எல்லா பகுதியிலும் சுரண்டி அரைக்கிலோ அளவிற்கு மண்ணை சேகரிக்க வேண்டும்.
இதேபோல் ஒரு ஏக்கருக்கு 4 அல்லது 5 இ;டங்களில் மண் மாதிரி எடுத்து அனைத்தையும் ஒன்றாக கொட்டி நன்கு கலக்கி வட்ட வடிவமாக பரப்பி அதன்மீது X குறியிட்டு எதிர் எதிர் பாகத்தை நீக்கி விடவேண்டும்.
இதேபோல் மூன்று அல்லது நான்குமுறை அரைக்கிலோ மண்வரும் வரை பிரிக்கனும் அவற்றை ஒரு பையில் போட்டு விவசாயின் பெயர், சர்வே எண், முன்பு சாகுபடி செய்த பயிரின் பெயர், அடுத்து சாகுபடி செய்யப்போகும் பயிரின் பெயர் முதலியவற்றை ஒரு பேப்பரில் எழுதி மண் ஆய்வகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பு :- மண் ஈரமாக இருந்தால் அவற்றை நிழலில்
உலர்த்த வேண்டும்.
அவ்வாறு செய்தால் நம்முடைய மண்ணின் தன்மை எவ்வாறு உள்ளது என்பதையும் நாம் என்ன உரம் கொடுக்கவேண்டும் எவ்வளவு அளவில் கொடுக்கவேண்டும் என்பதையும் மண்வள அட்டையை வைத்து தெரிந்து கொள்ளலாம்
அவற்றை தெரிந்து கொண்டு பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் கொடுக்கலாம். தேவையில்லாத செலவை மிச்சப்படுத்தலாம்.
விவசாயிகள் மண்பரிசோதனை செய்கிறார்கள் ஆனால் பாசன நீர் பரிசோதனை செய்வதில்லை மண்பரிசோதனை செய்யும்போதெல்லாம் கட்டாயமாக பாசன நீரையும் பரிசோதனை செய்யவேண்டும். தண்ணீரை எடுத்துவிட்டு மோட்டாரை சிறிது நேரம் குறைந்தது 10 நிமிடம் கழித்து தண்ணீர் சேகரிக்கும் பாட்டிலை நன்றாக சுத்தம் செய்து இருக்கவேண்டும்.
அதில் தண்ணீரை சேகரித்த தமிழ்நாடு வேளாண்மை துறையில் உள்ள மண் மற்றும் நீர் பரிசோதனை ஆய்வகத்தில் சேர்க்கவேண்டும் அங்கு அதற்குரிய கட்டணத் தொகையை செலுத்தி நம்முடைய நீரின் தண்மையையும் தெரிந்து கொள்ளலாம் மண்வள அட்டையில் நீரின் தன்மையை குறித்து தருவார்கள் .
மண்ணில் உள்ள களர் தன்மைக்கும், பாசனநீரில்; உள்ள உப்பின் நிலைக்கு நெருங்கிய தொடர்புண்டு. பாசனநீரில் உப்புத்தன்மை இருந்தால் அந்த நீர் பாயும் நிலத்திலும் உப்புத்தன்மை உண்டாக வாய்ப்புள்ளது.
குறிப்பாக களிமண் நிலமாயிருப்பின் உப்பின் நிலை மிக வேகமாக மண்ணில் அதிகரித்து அந்த மண் களர் மண்ணாகவோ உவர்மண்ணாகவோ மாறிவிடும்
வாய்ப்புண்டு எனவே அவசியம் பாசனநீரை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பாசனநீரின் தன்மையைத் தெரிந்துகொண்டால் அந்த நீரில் வளரும் பயிர்களைத் தெறிவுசெய்து பயிர்செய்து வெற்றிபெறலாம்.
மண் மற்றும் நீர் பரிசோதனை செய்ய தமிழ்நாடு வேளாண்மைத் துறையில் மண் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories