தேங்காய் அல்வா
தேவையான பொருட்கள் தேங்காய் ஒன்று சர்க்கரை 250 கிராம் பால் ஒரு லிட்டர் ஏலக்காய் ஆறு முந்திரி200 கிராம் நெய் ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காயும் முந்திரியும் நீர் விட்டு நன்றாக விழுதா அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறிக் கொள்ள வேண்டும்
பால் சுண்டி வரும் பொழுது சர்க்கரை மற்றும் ஏலப்பொடி போட்டு நன்றாகக் கிளறி விட வேண்டும்
அல்வா பதத்திற்கு வந்ததும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி ஆரவைத்தால் தேங்காய் அல்வா தயார்