மயில் ,முயல், அணில் தொல்லையினால் வயலில் ஏற்படும் சேதத்தின் எப்படி தடுக்கலாம்?

அடிக்கடி வெடி வைப்பதால் மயில் வருவதை தடுக்கலாம் .மேலும் கரைசலை வாரம் ஒருமுறை தெளிப்பதால் முயல்கள் வருவதையும், மாதம் 1 முறை பூண்டுக் கரைசலை தெளிப்பதால் அணில்வருவதை தடுக்கலாம்.

விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி காணலாம்?

பருவநிலை மாற்றத்தால் பயிர்களில் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படும் நிலையைத் தவிர்க்கவும், பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் முறை குறித்தும் மாவட்ட பகுதிகளில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் அணுகி ஆலோசனை பெற்று தீர்வு பெறலாம்.

சீதாப்பழத்தில் புழு அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்தும் முறைகள் யாவை?

200 லிட்டர் தண்ணீரில் தலா 100 கிராம் டிரைகோடெர்மா விரிடி சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம்.

வாரம் ஒருமுறை தசகவியா கரைசலைத் தெளிப்பதன் மூலம் சீதாப்பழத்தில் புழு தாக்கத்தை குறைக்கலாம்.

கத்திரி செடியை எவ்வளவு இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்?

கத்திரி செடியை தரத்திற்கு ஏற்றவாறு நடவு செய்யலாம். அந்தவகையில் 4 அடி அகலம் கொண்ட மேட்டுப் பாத்தியில் இரட்டை வரிசை முறையில் 60 x 60 சென்டி மீட்டர் இடைவெளியிலும் அதிக வளர்ச்சி கொண்ட ரக நாற்றுகளை உயிர் பாத்தியில் ஒற்றை வரிசை முறையில் 45 சென்டி மீட்டர் இடைவெளியிலும் நடவு நட வேண்டும்.

சில பசுக்கள் எப்போதும் சினை ஆவதில்லை? இதற்க்கு என்ன காரணம் ?

சரியான நேரத்தில் கருவூட்டல் செய்தல் வேண்டும். அதாவது சினைத் தருணம் வெளிப்பட்டதும் 12 மணி நேரம் கழித்து கருவூட்டல் செய்தல் நல்ல ஆரோக்கியமாக நோய்கள் பாதிப்பில்லாமல் பராமரிக்க வேண்டும்.

இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனைகள் அதாவது கருப்பை நோய்கள் ஹார்மோன் பிரச்சனைகள் கரு முட்டைகள் உருவாவதில்லை உருவாவது பிரச்சனைகள் போன்ற காரணங்கள் சினை பிடிக்காத காரணங்கள் ஆகும்.

இத்தகைய பிரச்சனைகளை கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை செய்தல் நன்மையை தரும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories