மருத்துவ குணம் நிறைந்த மலைப் பூண்டு- பக்குவப்படுத்தும் பணி தீவிரம்!

திண்டுக்கல் மலைப்பகுதியில் விளையும் மருத்துவ குணம் நிறைந்த மலைப்பூண்டுகளை புகையூட்டிப் பக்குவப்படுத்தும் பணிதீவிரம்.

புவிசார் குறியீடு (Geographic Code)
இந்திய அளவில் 734 வகையான பூண்டு வகைகள் உள்ளன. இதில் முதன்மையானது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் மலைப்பூண்டு. இதனைக் கருத்தில்கொண்டே அண்மையில் கொடைக் கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ரத்த அழுத்தப் பிரச்னைகள் தீரும் (Blood pressure problems will be solved)
ஆரோக்கியத்திற்கு மலைத்தேனில் ஊறிய மலைபூண்டு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
மலைத் தேனில் ஊறிய மலை பூண்டைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும், ரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் துரத்திவிடலாம்.

சுறுசுறுப்புக்கு (For agility)
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நாள்முழுக்கச் சுறுசுறுப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வதற்கு, தினமும் ஆறே ஆறு பல்,தேனில் ஊறிய மலைபூண்டு போதுமானது இதில்

மலைப்பூண்டு சாகுபடி (Garlic cultivation)
இத்தகைய சிறப்பு வாய்ந்த மலைப்பூண்டு, திண்டுக்கல் மாவட்டம் மேல்மலை பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி, கிளாவரைவில்பட்டி ஆகியவற்றில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

அந்த வகையில்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சிங்கப்பூர் ரக மலைப்பூண்டை, அறுவடை செய்யும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவே,

பக்குவப்படுத்தும் முறை (Maturation method)
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், அறுவடை செய்த பூண்டுகளைத் தோட்டங்களில் இருப்பு வைத்து, பின் அவற்றை வீட்டிற்குக் கொண்டு வருவோம். இதைத் தொடர்ந்து அவற்றைத் தரம் பிரித்து வீடுகளில் முற்றங்களில் தொங்க விடுவோம். இதற்காக மலைப்பகுதியில் விறகு சேகரித்து வீடுகளில், புகை மூட்டி பூண்டுகளின் தரத்தை மேம்படுத்துவோம் என்றார்.

இப்பணிகளை எல்லா விவசாயிகளும் செய்வதன் மூலம் பூண்டு நீண்டநாள் கெடாமலும் மருத்துவ குணம் அதிகரித்தும் காணப்படும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories