“கோடை இடியும் மாரி மின்னலும் மழை”
விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் தண்ணீரை தருவது மழைதான். அத்தகைய மழை வருவதை கணிக்கக் கூடிய ஒரு பழமொழியின் விளக்கத்தை இங்கு காணலாம்.
மகேஷ் உடைய ஊர் திருவாரூர். அவருடைய தொழில் விவசாயம். அவருடைய மகன் வழி பேரன் பிரகாஷ் பள்ளி முடிந்ததும் அவரது வீட்டிற்கு வந்து தாத்தாவையும் வாயிலில் வந்து சந்தித்து தான் செல்வான். ஒரு முறை பள்ளி முடிந்ததும் தாத்தாவை சந்திக்க வந்த பிரகாஷை பார்த்து ஏன் இங்கு வந்தாய்? மழை வரும் போல இருக்கிறது என்றார் அதற்கு அவரது பேரன் மழை வரவில்லை என்றான்.
உடனே அவனது தாத்தா “கோடை இடியும் மாரி மின்னலும் மழை”
என்ற பழமொழியை கூறினார் அதற்கு அவனது பேரன் என்ன சொல்கிறீர்கள் என்றான்.
உடனே தாத்தா மழை வருவதை முன்கூட்டியே கணக்கிட்டு சொல்வார்கள் அவ்வாறே மழை வருவதை கணிப்பதில் இதுவும் ஒன்று. எப்படி என்றவாறு இடி மின்னல் ஆகிய இரண்டுமே மழை நேரத்திற்கு முன்னதாக மழை பெய்யும் பொழுதும் வரக்கூடியது கோடைக்காலத்தில் வானத்தில் இடி தோன்றினாலும் மழை பெய்யும் போது மின்னல் மின்னி நாளும் மழை கண்டிப்பாக வரும். அதனால் “கோடை இடியும் மாரி மின்னலும் மழை” என்று சொல்வார்கள் நமது முன்னோர்கள் என்றார்.
அதற்கு அவரது பேரன் மழை வருவதை கணிக்க வேறு வழி ஏதாவது உண்டா தாத்தா என்றான் அதற்கு அவனது தாத்தா தவளைகள் கத்துதல்,அந்தியில் ஈசல் பூத்தல் , தும்பி பறப்பது போன்ற நிலைகளை கொண்டு மழை வருவதை கணிக்கலாம். என்றார்.
அதற்குப் பேரன் பிரகாஷ் அந்தக் காலத்திலேயே மழை வருவது இப்படி எல்லாம் கணித்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினான்.