மா பிஞ்சுகள் உதிராமல் பாதுகாக்க வேண்டுமா? சில வழிகள்!

கோடை என்றாலே கொளுத்தும் வெயிலும், மாம்பழங்களுமே நம் நினைவலைகளை நிரப்பும். ஏனெனில், இந்த ஆண்டு ருசிக்காமல் விட்டுவிட்டால், இன்னும் 12 மாதங்கள் காத்திருக்க வேண்டியது கட்டாயம் இதில்,

பெரும் பிரச்னை (Great problem)
அவ்வளவு சிறப்பு மிக்க மாமரங்களில், மாங்காய் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுப்பது என்பது சவால் மிகுந்தது. இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் ரெடியா? இதோ பின்வரும் டிப்ஸ்களைப் பயன்படுத்தி, மா பிஞ்சுகள் உதிர்வதை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

சத்து குறைபாடு ( Malnutrition)
இதற்கு முதல் காரணம் மாமரம் சத்து இல்லாமல் இருந்திருக்கலாம். பொதுவாக மே மாசம் அறுவடை முடிந்த பின் மரத்தை நம் சரியாக கவனிக்கத் தவறியிருப்போம்.

மறுபடியும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மாமரத்தை கவனிக்க ஆரம்பிப்போம். எனவே இதற்கு இடைப்பட்டக் காலங்களில், மரத்திற்குத் தேவையான சத்துக்கள் இல்லாமல் போயிருக்கும்.

வரப்புகள் தேவை( Boundaries required)
முதலில் முறையான வரப்புகள் இருக்கவேண்டும் . இந்த வரப்புகள், அதன் பகுதியில் உள்ள மரங்களில் அடியில் இருக்கும் சத்துக்கள் வெளியே செல்லாமல் பாதுகாக்கும் அரணாகத் திகழும்.

நீங்கள் இடு பொருட்கள் கொடுத்தாலோ அல்லது போன தடவை கொடுத்திருந்தாலோ அவை நகராமல் இருக்க வரப்பு தேவை.அதேசமயம் தீடிரென்று கடும்மழை பெய்யும் போது, நாம் கொடுக்கும் சத்துக்கள் அடித்து செல்ல வாய்ப்புள்ளது. எனவே முதலில் வரப்பு சரியான உயரத்தில் (3 அடி ) போடுவது அவசியமான ஒன்று.

பூஞ்சை தொற்று (Fungal infections)
அடுத்தது ஜூன் முதல் நவம்பர் வரை மழை பெய்யக் கூடிய இந்த காலகட்டங்களில் எப்ப மழை பெய்தாலும் குறைந்தபச்சம் 45 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் மரங்களில் மீது தெளித்து விடுவது பெரிய அளவில் மாமரங்கள் நோய் வராமல் தடுக்கும் .

பொதுவாக இந்தக்காலகட்டத்தில் பூஞ்சைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். மாமரத்தின் இலைகள் பச்சை அல்லது கரும் பச்சை நிறத்தில் இருக்கும்.
பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது சாம்பல் நிறத்திற்கு மாறி பூ மற்றும் பிஞ்சுகளை தாக்கிக் கிழே விழவைக்கும். மழைக்காலத்தில் பூஞ்சை தொற்று கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

பருவநிலை (Season)
அடுத்து மாம்பிஞ்சு உதிர்வதற்கு முக்கிய காரணம் பருவநிலை . பொதுவாக டிசம்பர் மாதத்தில் மழை முடிந்து பின்பு காற்றில் ஈரப்பதம் இருக்கும். இந்த பருவத்தில் மாமரம் பூக்கும்.

தரைவழி தண்ணி தர மாட்டோம் தண்ணீர் குறைய ஆரம்பித்துவிடும் , அப்பொழுது பூக்கள் காய் பிடித்து காம்பெல்லாம் வத்தி உறுதியாகி காயை உறுதியாக பிடித்து கொள்ளும். இந்த மாதிரியான நேரங்களில் மிக அதிகமாக தண்ணீர் கொடுக்கக்கூடாது.

நீங்கள் கொடுத்தாலோ அல்லது பருவம் தப்பி மழை பெய்தாலோ காம்பு ஊறி போய் மா பிஞ்சுகளை தாங்கும் அளவிற்கு வலிமை இருக்காது. எனவே அது காம்பிலிருந்து பிஞ்சு வரை கருப்பாகி பிஞ்சு விழுந்துவிடும் மற்றும்

பஞ்சகவியா
பூ வந்தபிறகு ஒரு சுண்டு விரல் அளவு வரவரைக்கும் மரத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. தெளித்துக் கொடுப்பதே நல்லது. இருந்தாலும் நுன்னூட்ட சத்துக்களாக இருந்தாலும், குறிப்பாக பஞ்சகவியாவை நன்றாகத் தெளித்துக் கொடுக்கலாம்.

ஒரு வேளை மழைபெய்து காம்புகள் உறுதியாக இல்லாமல் இருக்கும் சமயத்தில் பஞ்சகாவியா நல்லபலன் தரும். இதில் உள்ள நுண்ணூட்ட சத்துக்கள் மா பிஞ்சு உதிர்வதை தடுக்கும். மேலும் இதில் உள்ள சூடோமோனஸ் பூஞ்சாணத்தை கட்டுப்படுத்தும். டிசம்பர் 20 தேதியிலிருந்து பிப்ரவரி முதல் வரம் வரை குறைந்தது மூன்று முறை தெளிக்கலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories