கோ-1 ,கோ-2, கோ-3 ,பிகேஎம் 1 போன்ற மிளகாய் ரகங்கள் மானாவாரி மற்றும் இரவை நடவிற்கு ஏற்றவை.
அர்கா ஹரிதா, அர் கா மெக்கான ,அர்கா ஸ்வேதா, மற்றும் அர்கா லோகித் ராகங்களை தோட்டக்கலை துறை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது .மேலும் நாட்டு ரகங்களான சாத்தூர் சம்ப, ராமநாதபுரம் குண்டு ,நம்பியூர் குண்டு ஆகிய ரகங்கள் உள்ளன.
பாரம்பரிய விதைகளை எங்கு பெறலாம்?
தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக ஆண்டிற்கு இருமுறை பாரம்பரிய அரிசி விதை திருவிழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுக்காவில் உள்ள ஆதிரங்கம் என்ற ஊரில் இயங்கி வருகின்ற மையத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் விதைகளை 53 விதைகளை சேகரித்து வைத்திருக்கிறார்கள். .இந்த விதை திருவிழாக்கள் மூலம் பாரம்பரிய விதைகளை விவசாயிகள் பெறலாம்.
மண்புழு உரத்தை உயிரி உரத்துடன் கலந்து பயன்படுத்தலாமா?
மண்புழு உரத்துடன் உயிரி உரங்களை கலந்து பயன்படுத்தலாம். இதனால் பூச்சி, பூஞ்சாண நோயிலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.
ஏக்கருக்கு 50 கிலோ மண்புழு உரத்துடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி ,சூடோமோனஸ் ஆகியவற்றை தலா 2 கிலோ என்ற அளவில் கலந்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
எள் எப்பொழுது கலைத்துவிட வேண்டும்?
மானாவாரி விவசாயத்தில் நெல் சாகுபடியை பொருத்தவரை விதைத்த 45-வது நாளில் எள்ளை கலைத்துவிட வேண்டும்.
எள் விதைகள் துவக்கும் போது செடிகள் இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக இருக்கும். இதனால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்காது .இதற்கு எல் செடியை 15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு கலைத்து விட வேண்டும்.
வெள்ளாடுகள் எப்பொழுது சினை பருவத்திற்கு வரும்?
வெள்ளாடுகள் 18 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை சினை பருவத்திற்கு வரும். சினைத் தருணம் 2 முதல் 3 நாட்களுக்கு நீடிக்கும்.
ஆனால் குளிர்காலத்தில் சினைத் தருணம் 24 முதல் 36 மணி நேரம் மட்டுமே இருக்கும்.
———————————————————————–