மிளகாயை கலைகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?

 

ஒரு ஏக்கருக்கு எவ்வளவு மலைவேம்பு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்? எப்பொழுது அறுவடை செய்யலாம்?

மலைவேம்பு மரத்தை வளர்க்க வடிகால் வசதி உள்ளஅனைத்து நிலங்களும் இருந்தது உகந்தவை. மலைவேம்பு நடவு செய்வதற்கு ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் 15 அடி இடைவெளி விட்டு ஒரு ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை நடவு செய்யலாம்.

இதன் வளர்ப்பு காலமானது 7 ஆண்டுகள் ஆகும். மேலும் இதை 3 ஆண்டில் தீக்குச்சி தயாரிக்கும் 7 ஆண்டுகள் வரை வளர்ந்த மரங்கள் மரப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

 

விவசாய பயிர்க் கடனை எப்பொழுது திரும்ப செலுத்த வேண்டும்?

எந்த பயிர் சாகுபடிக்காக கடன் வழங்கப்படுகிறதோ அதன் அறுவடைக்காலம் முடிந்து இரண்டு மாதத்திற்குள் வட்டியும் அசலும் சேர்த்து கட்டி முடிக்க வேண்டும்.

அறுவடை மகசூலை பணம் ஆக்குவதற்கு இரண்டு மாத கால அவகாசம் தரப்படும் .இரண்டு பருவம் இரண்டு அறுவடைக்குப் பிறகு என்ற வகையிலும் கடனை திருப்பி செலுத்தலாம்.

மிளகாயை கலைகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?

மிளகாயில் ஊடுபயிர் செய்வதால் களைகளை கட்டுப்படுத்தலாம்.

மிளகாய் கொத்தமல்லி அல்லது சின்ன வெங்காயத்தை ஊடுபயிராக 45 சென்டிமீட்டர் வரிசைக்கு வரிசை இடைவெளிவிட்டு நடவு செய்வதால் களைகளை கட்டுப்படுத்துவதுடன் அதிக மகசூல் பெறலாம்.

பவர் டில்லர் என்ற விவசாய கருவி சிறப்பம்சங்கள் என்ன?

பவர் டில்லர் ஐ பயன்படுத்தி நெல் கரும்பு மக்காச்சோளம் வயல்களில் மிக விரைவாக உழ வு செய்யலாம். மேலும் இக்கருவியின் மூலம் சேற்று வயல்களிலும் மற்றும் புழுதி நிலத்தில் உழவு செய்ய முடியும். இவ்வாறு பயன்படுத்துவது இந்த கதையின் முதன்மைப் பயன் ஆகும்

இந்த இயந்திரத்தில் உயர் அழுத்த இணைத்து மா தென்னை உள்ளிட்ட பல்வேறு மரம் மற்றும் செடிகளுக்கு உரம் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

கன்று பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும் தாய்ப்பசு நாக்கினால் நக்கி சுத்தம் செய்வது எதனால்?

ஒரு கன்று பிறந்தவுடன் அவற்றின் மூக்கு மற்றும் வாயை பரிசோதித்து அதில் கோழை மற்றும் சளி இருந்தால் அவற்றை உடனே அகற்ற வேண்டும்.

கன்று பிறந்தவுடன் தாய் பசுவானது கன்றினை நாக்கினால் நக்கி கன்றின் மேல் இருக்கும் ஈரத்தை போக்குவதால் கண்ட்ரி சுவாசிப்பதற்கும் ரத்த ஓட்டத்தை தூண்டும் வழிவகுக்கிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories