முருங்கையில் பழ ஈயை கட்டுப்படுத் தும் முறை
முருங்கை மரத்தில் பழ ஈ தாக்கினாலும், காயை தாக்கினாலும் பிசின் போன்ற திரவம் வடியும் அந்த காயை சமைத்தால்; கசப்பாக இருக்கும். காயின் தரம் குறைந்து காணப்படும்.
இவற்றை கட்டுப்படுத்தும் முறை
இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடங்களில் வைத்து பழ ஈயை கவர்ந்து அழிக்கலாம். அல்லது
ஒரு லிட்டர் தண்ணீருக்கு மோனோ குரோட்டோபாஸ் 2 மில்லி, டைக்குளோராவாஸ் 1மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
முக்கிய குறிப்புகள்
முருங்கை மரம் 2 ½ அடி செடி வளர்ந்த பின்பு செடியின் நுனியை கிள்ளி விட வேண்டும். 20 கிளைகள் வரும் வரை கொழுந்து கிள்ள வேண்டும்.
வயலில் தேனீ பெட்டி வைத்தால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு.
3 நாள் புளித்த தயிரை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்தால் 20 சதம் வரை மகசூலை அதிகப்படுத்தலாம்.
இரசாயன மருந்துகள் அடிக்கும் பொழுது மாலை வேளையில் தான் தெளிக்க வேண்டும்
ஏனென்றால் காலை நேரத்தில் தேன் வண்டுகள் வயலுக்கு வரும் அவ்வாறு வந்தால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது
