முருங்கையில் பூ அதிகம் பிடிக்க ஒரு இயற்கையான வழி
முருங்கையில் அதிகம் பூ பிடிக்க மூன்று நாட்கள் புளித்த தயிரை, பத்து லிட்டர் தண்ணீருக்கு 300 மிலி என்ற வீதத்தில் கலந்து மாலை வேலையில் இலைகள் நன்கு நனையும் படி தெளித்தால் பூ அதிகம் பிடிக்கும்
முருங்கையில் பழ ஈயின் தாக்குதலை எவ்வாறு கண்டறிநது அவற்றை கட்டுப்படுத்துதல்
பழ ஈ காய்களில் முட்டையிட்டு இரண்டு நாளில் இளம் புழுக்கள் காய்களை துளைத்து விதை மற்றும் சதைப் பகுதியினை உண்ணும். இவ்வாறு தாக்கப்பட்ட காய்களில் பிசின் போன்ற திரவம் வெளிவரும். காய்கள் நுனியிலிருந்து காய்ந்து விடும் அல்லது பிளந்து விடும். அழுகிய காய்கள் ஈக்களை கவருவதால் இதனையும் தாக்கப்படாத காய்களையும் உடனே சேகரித்து குழியிலிட்டு எரித்து விட வேண்டும்.
பழ ஈ யை கவர்ந்து அழிக்க இனக்கவர்ச்சி பொறி உள்ளது ஒரு ஏக்கருக்கு பத்து இடங்களில் வைத்து பழ ஈயை கவர்ந்து அழிக்கலாம்.
பின் காய்களை பறித்த பின்னர் இரசாயன முறையில் பழு ஈயை கட்டுப்படுத்த பென்தியான் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளித்த 10 நாட்கள் கழித்த பின்னர் மட்டும் காய்களை பறித்து விற்பனை செய்ய வேண்டும்.