முள்ளங்கி எப்படி பயிரிடுவது?

 

பருவம்

மலைப்பகுதிகளில் மார்ச் மாதம் சமவெளிப் பகுதிகளில் செப்டம்பர் மாதம் பயிர் செய்யலாம்.

மணல்

அனைத்து வகையான மண்ணிலும் முள்ளங்கியை சாகுபடி செய்யலாம். அதிக விளைச்சல் பெற இயற்கையான எரு மிகுந்த லேசான மணல் கலந்த கார அமில அளவு 5.5 முதல் 6.8 கொண்ட வண்டல் நிலம் மிகவும் ஏற்றது.

நிலம் தயாரித்தல்

நன்கு மக்கிய தொழு உரம் எக்டருக்கு 25 டன் கடைசி உழவின்போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும் .நிலத்தை நன்கு உழுது தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள பாத்திகளில் வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்த 10 சென்டி மீட்டர் இடைவெளியிலும் 1.25 சென்டிமீட்டர் ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

நீர்ப்பாசனம் விதைப்பதற்கு முன்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். மண்ணில் ஈரம் காய்ந்து விடாமல் தேவைப்படும்போது நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

விதைப்பதற்கு முன்பு உரமாகவும் அடியுரமாக 25 கிலோ தழைச்சத்து 100 கிலோ மணிச்சத்து 50 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். விதைத்த 30வது நாள் கழித்து25 கிலோ தழைச்சத்து மேலுரமாக இடவேண்டும்.

பயன்கள்

முள்ளங்கியில் ஃபைபர் பொட்டாசியம் காப்பர் வைட்டமின் டி பி6 மெக்னீசியம் மாங்கனீசு கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் விளைவுகளைஈக்கும் . மேலும் இது தளர்வான குடல் உறுதிப்படுத்துவதற்கு உதவிகளை செய்கிறது

முள்ளங்கி இருதய நோய்களை குணமாக்க உதவுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories