மைக்கோரைசா(வேம்) என்றால் என்ன?

மைக்கோரைசா(வேம்) என்றால் என்ன?
இது ஒரு பயன் அளிக்கக் கூடிய வேர் பூஞ்சாணம். இந்த பூஞ்சாணம் பயிரின் வேரையும், மண்ணையும் இணைத்து மண்ணில் இருக்கக் கூடியது.
சத்துக்களையும் (அதாவது நேரடியாக பாஸ்பரசையும், மறைமுகமாக நைட்ரஜன், பொட்டாசியம், மற்றும் மெக்னீசியம், இரும்பு, ஜிங், மாங்கனீசு சத்துக்களையும் ) நீரையும் உறிஞ்சக்கூடிய
தன்மையை கொண்டது.இந்த பயன் அளிக்கக் கூடிய வேர் பூஞ்சாணம் (மைக்கோரைசா) உலகத்தில் உள்ள பயிர் மற்றும் தாவர வகைகளில் 95 சதம் நெருக்கமான உறவை கொண்டுள்ளது.
மைக்கோரைசாவின் நன்மை
வேர்களுக்கும் மண்ணில் உள்ள சத்துக்களையும், நீரையும் உறிஞ்சும் சக்தியை அதிகப்படுத்துகிறது. பயிர் நன்றாக வளர, ஏற்ற மண்வளத்தையும், சூழ்நிலையும் உண்டாக்குகிறது.
நாற்றங்காலில் இருந்து மாற்றி நடும் போது ஏற்படக்கூடிய பயிர் எண்ணிக்கை இழப்பை குறைக்கிறது. உரத்தின் அளவை குறைக்கிறது. அதன் மூலம் உரச்செலவை குறைக்கிறது. மண்ணில் உள்ள நோய் உண்டாக்கக்கூடிய பேக்டீரியா மற்றும் பூஞ்சாணம் போன்றவற்றை எதிர்க்கும் சக்தி பயிர்களுக்கு அதிகரிக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories