வயல்களில் உள்ள எலிகளை கட்டுப்படுத்தும் எளிமையான வழிமுறை!

உணவு தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை வயலில் உள்ள எலிகள் சாப்பிட்டு சேதப்படுத்துகின்றன. இந்த எலிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். அத்தகைய எலிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று இங்கு காணலாம்.

எலிகள் தான் இதுவரை விளைந்த அனைத்து தானியங்களையும் தின்று சேதப்படுத்தி விடுகிறது.

நொச்சி மற்றும் எருக்கன் செடியை வயலை சுற்றி வேலி பயிராக நட்டால் எலித் தொல்லை இருக்காது. தங்கரலி கிளைகளை வயலைச் சுற்றி போட்டால் எலி தொல்லை அதிகம் இருக்காது.

சணப்பு பூவை சிறிய துண்டுகளாக்கி அதை பரவலாக ஆங்காங்கே வயலில் இட்டால் அதிலிருந்து கிளம்பும் வாடையினால் எலிகள் ஓடி விடும் . எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி நட்டு வைத்தால் அது எலி தொல்லையை குறைக்க உதவும். பசுஞ்சாணத்தை வயலிலும் பரப்பிலும் வைத்தால் எலித் தொல்லை குறையும்.

தொடர்ச்சியாக பாசனத்தில் ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் கலந்து விடும் போது எலிகளின் நடமாட்டம் அறவே இல்லாமல் போகும்.

பப்பாளி காய்களை துண்டுதுண்டாக வெட்டி மாலைவேளையில் வரப்புகளில் போட்டுவிட்டால் எலிகள் பப்பாளித் துண்டுகளை தின்றுவிடும்.

பப்பாளியில் இருக்கும் பிசின் போன்ற திரவம் எலியின் வாய்களில் ஒட்டி விடுவதால் எலிகள் இறந்துவிடும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories