வரகு, வரட்சி, வெள்ளம், நட்டம்
ஆனி மாதத்தில் கிடைத்த மழை கொண்டு மானாவரியில் வரகு விதைத்திருந்தோம்!!
விதைத்து முளைத்த பிறகு 45 நாட்களுக்கு சரியான வரட்சி..
அதனால் முளைத்த பயிர்கள் அனைத்தும் கருகும் சூழல்.. கொல்லி நிலத்தில் நீர் வசதி இல்லை , வானம் பார்த்த பூமி ஆதலால்!!
ஆவனி மாதம் தான் மழை வந்தது !! அதில் களைகள் நிறைய முளைத்துவிட்டது!! தொடர் மழையால் 15 நாட்களுக்கு களை எடுக்க முடியவில்லை!! அதனால் களைகள் மூடி அதிலும் வரகு வளர்ச்சி தடைபட்டது!!
பிறகு 4000 செலவு செய்து களை எடுத்து வரகை மீட்டேன்!!
பின்பு தற்பொழுது மழை வெள்ளம், அதனால் அறுவடை 20 நாட்கள் தள்ளி அறுவடை செய்தோம்!!
800-1000 கி 70 சென்டில் எதிர்பார்தேன்!!
180 கி வரகு மட்டுமே கிடைத்தது!!
இதில் 80-90 கி அரிசி கிடைக்கும்!!
அதிகப்படியான விலை வைத்தாலும் 9000 மட்டுமே கிடைக்கும்!!
நான் 13000 இதுவரை செலவு செய்துள்ளேன்!!
4000 நட்டம்!!
இந்த இழப்பை வேறு ஏதிலாவது தான் ஈடு செய்ய வேண்டும்…!!
😩
சரி அடுத்து கார்த்திகை முடியறதுக்குள்ள உளுந்து விதைக்கனும்!!
விவசாயத்தில் இது போல நட்டங்கள் ஏற்படுவது இயல்பு!! விட்டத அடுத்த முறை பிடிச்சிக்கலாம்!! ஆனா விடாம செய்யனும்!! விவசாயத்தை
இயற்கை வழியில் இயன்ற வேளாண்மை செய்வோம்
-உழவர் வ.சதிஸ்.,
அறல் கழனி,
கோட்டப்பூண்டி,
மேல்மலையனூர்,
8940462759