வரட்சி மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்றி விவசாயம் பூமியாக மாறியது எப்படி

வரட்சி மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்றி விவசாயம் பூமியாக மாறியது எப்படி

அன்பான உழவர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருக்கும் அன்பான பசுமை வணக்கம் தமிழ்நாட்டில் மிகவும் வரட்சியான மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் அந்த மாவட்டத்தை வளமாக மாற்றிய மாமனிதர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அய்யா நந்தகுமார் அவர்கள் 2012 ஆண்டு மாவட்ட ஆட்சியர் பொருப்பு ஏற்று மாவட்டத்தில் அனைத்து துறைகள் வளர்ச்சி பெரும் வகையில் பல்வேறு வகையான திட்டம் செயல்படுத்திய தின் விலைவாக பல்வேறு மாற்றங்கள் நடந்து உள்ளது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி பொரியல் கல்லூரி படித்து பட்டம் பெற்றுள்ளார்கள்

இரண்டாம் பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரணிகள் கன்மாய்கள் தூர் எடுத்து நீர் ஆதாரம் சேமிப்பு செய்யப்பட்டது தனிநபர் உழவர்கள் நீர் சேகரிப்பு 5000 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டது இதனால் விவசாயிகள் பயன்படுத்தி கொண்டார்கள்

அடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் தனிநபர் உழவர்கள் பயன் படுத்தி கொண்டு உள்ளார்கள் கிணறு 750 வெட்டப்பட்டது
அந்த உழவர்கள் பழ மரங்கள் மா கொய்யா எலுமிச்சை நெல்லிக்காய் பலா முந்தரி சப்போட்டா தேக்கு குமிழ் தேக்கு மகோகனி செம்மரம் ரோஸ்உட் வேங்கை பூவரசு வேம்பு ஆவி போன்ற மரங்கள் நடவு செய்து 6 மாதங்கள் செடிகள் தண்ணீர் ஊற்றி வளர்க்க 100பணியாடகள் பயன்படுத்தி கொண்டார்கள்.
சாலையில் மற்றும் பொது பஞ்சாயத்து உள்ள காலி இடங்கள் மரங்கள் நடவு செய்யப்பட்டது
தனி நபர் உழவர்கள் பயன் படுத்தி கொண்டார்கள் காளான் குடில் ஆட்டு கொட்டகை மாட்டு கொட்டகை பழ மரங்கள் நடுதல் காய்கறிகள் ஊக்குவிப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
அந்த வகையில் அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்தி கொண்டனர் அந்த பயனாளிகள் ஒருவர் எட்டிவயல் முருகேசன் அவர்கள் நிலம் விற்பனை தொழில் செய்த நபர் இன்று இயற்கை வேளாண்மை செய்து அசததி வருகிறார் அவர்கள் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மழைநீர் அறுவடை செய்து பழ மரங்கள் காய்கறிகள் பாரம்பரிய கால்நடை கோழிகள் மீன் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து பயிற்சி அளிடவருகிறார் உற்பத்தி செய்த பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் விற்பனை செய்து வருகின்றனர் அந்த வகையில் பயன் பட்ட தெற்கு தரவை பாலு 100 திட்டம் மூலம் கிணறு வெட்டப்பட்டு மா தென்னை முருங்கை சாகுபடி காய்கறிகள் கொத்தவரங்காய் கத்தரிக்காய் மிளகாய் கீரைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர் மேலும் பாலு ஆடு மாடு கோழி வாத்து வளர்ப்பு செய்து வருமானம் ஈட்டி வருகிறார் பாரம்பரிய தர்பூசணி தொடர்ந்து பயர் செய்து வருகின்றனர் நண்பர்களே நாம் தண்ணீர் இல்லாமல் இருக்கலாம் ஆனால் பெய்யும் மழை நீர் சேகரிப்பு செய்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories