வராக குணபம் என்ற பன்றி இறைச்சி உயிர் ஊட்ட கரைசல் தயாரித்தல்

வராக குணபம் என்ற பன்றி இறைச்சி உயிர் ஊட்ட கரைசல் தயாரித்தல்
பயன்கள்
பயிர் நன்கு செழித்து வளரும்
பயிருக்கு உரமாகவும் பயன்படுகிறது
பூச்சி, விரட்டியாகவும் செயல்படுகின்றது.
பூஞ்சாணநோய் தாக்குதல் இருக்காது
தலை சிறந்த உயர் ஊட்ட உரம்
மலை தோட்ட வாசைன பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பழமங்;களுக்கும் தென்னை போன்ற நீண்ட காலப் பலன் தரும் மரங்களுக்கும் நல்ல பலனை அளிக்கக் கூடியது.
தென்னையில் காய்கள் அதிகம் பிடிக்கின்றன. குரும்பைகள் உதிர்வது குறைகின்றது.
ஈரியோபைட் சிலந்தி பூச்சி தாக்குதல் முற்றிலும் குறைகின்றது
தயாரிக்க தேவையான பொருட்கள்
1. தண்ணீர் – 6 லிட்டர்
2. பச்சை பசுஞ்சாணம் – 5 கிலோ
3. பாசுமாட்டு கோமியம் – 3 லிட்டர்
4. பசுமாட்டு நெய் – ¼ லிட்டர்
5. பசுமாட்டு பால் – 1 லிட்டர்
6. தயிர் நன்கு புளித்தது – 1 லிட்டர்
7. கரும்புச் சாறு – 2 லிட்டர்
8. இளநீர் – 2 லிட்டர்
9. வாழைப்பழம் – 2 கிலோ
10. பப்பாளி பழம் – 2 கிலோ
11. நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் – 3 கிலோ
12. கருப்பு உளுந்து – 3 கிலோ
13. கருப்பு எள் — 500 கிராம்
14. வெண் கடுகு — 200 கிராம்
15. வாயு விடங்கன் — 200 கிராம்
16. தேன் — 200 கிராம்
17. இஞ்சி — 200 கிராம்
18. பன்றி மாமிசம் – 3 கிலோ
19. பன்றி சாணம் அல்லது ஆட்டு உதப்பி – 2 கிலோ
20. அதிமதுரம் — 200 கிராம்
21. அல்பால்பா — 200 கிராம்
வாரக குணபம் தயாரிக்கும் முறை
பன்றி இறைச்சி அதன் கழிவு பொருட்களுடன் (குடல் போன்றவை) 6 லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு பெரிய அலுமினிய அல்லது எவர் சில்வர் பாத்திரத்தில் இட்டு தோட்டத்தில் உள்ள திறந்தவெளி அடுப்பில் நன்கு வேகவிடவும்.
பன்றி இறைச்சியை வேகவைக்கும் பொழுது இஞ்சியை சிறிது துண்டுகளாக வெட்டி போடவும். இஞ்சி சேர்ப்பதால் கறி சீக்கிரம் வெந்துவிடும்.
பாத்திரத்தில் பன்றி இறைச்சி வேகவைக்கும் பொழுது பாதிஅளவு வெந்தவுடன் 250 கிராம் நெய்யை ஊற்றவும். பின்பு இறைச்சியை அடுப்பில் இருந்து இறக்கும் பொழுது 200 கிராம் தேனை ஊற்றவும்.
பன்றி குணபம் தயாரிக்கும் முதல் நாள் 500 கிராம் கருப்பு உளுந்தையும், 500 கிராம் கருப்பு எள்ளையயும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் .மறுநாள் இறைச்சியை வேகவைத்து இறக்கி ஆறிய பின்பு மாவாக ஆட்டிய உளுந்து எள் கலவை மாவை பன்றி இறைச்சியுடன் கலக்க வேண்டும்.
50 லிட்டர் பிடிக்கும் பிளாஸ்டிக் அல்லது வேறு ஏதாவது சில்வர் பாத்திரம் மூடி உள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் 3 கிலோ நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை தூள் செய்து 5 லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும்.
5 கிலோ பசுவின் சாணத்தை கரைத்து இந்த கரைசலில் முன்பு தயாரித்து வைத்துள்ள (வராக) பன்றி இறைச்சி கரைசலுடன் ஊற்றவும். இதில் பப்பாளி பழம், வாழைப்பழம் திராட்சைப்பழம் அகியவற்றை நன்கு பிசைந்து அத்துடன் வெண்கடுகு, , அதிமருதம் ஆகியவற்றை நன்கு பொடியாக்கி சேர்க்கவும்.
இளநீர், பசும்பால், பசுமாட்டு சிறுநீர், (மூத்திரம்) புளித்த தயிர், கரும்புச் சாறுஇவைகளை சேர்த்து கலக்கி பின்பு பன்றி சாணம் அல்லது ஆட்டு உதப்பியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்பொழுது வராக குணபகரைசல் தயார் செய்யப்பட்டு விட்டது. இக்குணபத்தை தினசரி காலை, மாலை நன்கு கலக்கிவிட்டு வரவும். இவ்வாறு 21ம் நாள் செய்த பின்பு இக்குணபத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் பயிர்கள்
அனைத்து பயிர்களுக்கும் பன்படுத்தலாம்
குறிப்பாக இந்த வராக குணப திரவம் உரம், நெல், உளுந்து, காய்கறி போன்ற பல பயிர் வகைகளுக்கும், பழமங்களுக்கும் தென்னை போன்ற நீண்ட காலப் பலன் தரும் மரங்களுக்கும் நல்ல பலனை அளிக்கக் கூடியது.
தலை சிறந்த உயர் ஊட்ட உரம் எனப்படும்
பயன்படுத்தும் அளவு
1 லிட்டர் தண்ணீரில் 30 மில்லி முதல் 40 மில்லி வரை பயன்படுத்தலாம்
கேழ்வரகு, நெல் பயிருக்கு நடவு நட்டு மேல் உரங்கள் இடும் பருங்;களில் அதாவது தூர்கட்டும் பருவம், சூல் கட்டும் பருவம், கதிர் வரும் பருவம் அதாவது நடவு நட்ட 20: 45: 70 நாட்களில் தெளிக்க வேண்டும்.
தென்னை, பழ மங்;களுக்கும் ஸ்பிரே மூலம் தெளிக்கலாம். தென்னை பல மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 250 மில்லி அளவு வராக குணபத்தை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தின் அடியில் 3 அடி தள்ளி கடப்பாரையால் நான்கு திசைகளிலும் ஒரு அடி ஆழத்தில் குழிபோட்டு ஊற்ற வேண்டும்
.
தென்னைக்கு ஒரு வருடத்திற்கு நான்கு தடவை பயன்படுத்தவேண்டும். ஆனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் அதன் பலன்கள் அதிகமாகும்.
மலை தோட்ட வாசைன பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
தென்னை மரத்தில் பாளை வெடித்து இருக்கும் சமயம் ராக்கர் ஸ்பிரெயர் மூலம் வராக குணபத்தை தண்ணீரில் கலந்து தெளித்தால் காய்கள் அதிகம் பிடிக்கின்றன. குரும்பைகள் உதிர்வது குறைகின்றது.
ஈரியோபைட் சிலந்தி பூச்சி தாக்குதல் முற்றிலும் குறைகின்றது. தென்னை மரத்திற்கு வேர் மூலம் திரவ உரத்தை கொடுப்பதைவிட மரத்தின் மேல் பாளையில் தெளிப்பது அதிக பலனைத் தருகிறது.
அது அனுபவத்தில் கண்ட உண்மை
தென்னைக்கு வேர் மூலம் செலுத்துகின்றபொழுது இதன் பலன்கள் அறுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் நேரில் நன்கு தெரிகின்றது. காய்கள் பெரிதாக காய்க்கின்றது.
ஒவ்வொரு பொருட்களிலும் உள்ள சத்துக்கள்
பசுமாட்டு சாணம்
பாக்டீரியாவாக நண்ணுயிர் சத்துக்கள்
உள்ளன. மண்ணை வளப்படுத்தும்
பசுமாட்டு சிறுநீர்
பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்துக்கள் 51 சதவீதம் உள்ளது. பூச்சி விரட்டியாக செயல்படுகின்றது.
பால் –
இதில் புரதசத்து கொழுப்புச் சத்து, சண்ணாம்பு சத்து உள்ளது.
நெய்
வைட்டமின் ஏ, பி , கால்சியம் கொழுப்பு சத்துக்கள் அடங்கி உள்ளன.
தயிர்
நுண்ணுயிர்கள் உள்ளதால் நொதிக்கும் தன்மை ஏற்படுத்துகின்றது
கரும்புச்சாறு
குளுக்கோஸ்; உள்ள நுண்ணுயிர் வளர்ச்சி ஊக்கி உள்ளது
இளநீர்
-சைட்டோசைக்கிளின் எனும் வளர்ச்சியும் மற்ற தாதுசத்துக்கள்
உள்ளது. பயிர் மகசூலை அதிகரிக்கச் செய்கின்றது. பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகின்றது
கள்; கருப்பு திராட்சை – தாது உப்புக்கள் உள்ளது
வாழைப்பழம், பப்பாளிப் பழம்
நொதிப்புத் திறனை அதிகரிக்கச் செய்து
நுண்ணுயிர்களை பெருக்கமடையச் செய்கின்றது
பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல் படுகிறது
நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம்
வராக குணபத்தில் உள்ள அனைத்துப்
பொருட்களையும் எளிதில் நொதிப்பு தன்மையடையச்
செய்கின்றது. நுண்ணுயிர் பெருக்க மடையசெய்கிறது
கருப்பு உளுந்து
இவற்றில் மாவு ஒட்டும் பொருளாக பயன்படுத்த உபயோகம்
ஆகின்றது. புரதச்சத்து உள்ளது, நொதிப்புத்திறன் கொண்டது.
கருப்பு எள்
பூச்சி விரட்டியாகவும், பூச்சிக் கொல்லியாகவும்
பயன்படுகின்றது.
வெண் கடுகு
பூச்சி பூசண தடுப்பியாக செயல்படுகின்றது. காய்ப்புழுவை
கட்டுப்படுத்தும் நூற்புழு தடுப்பியாகவும் செயல்படும்.
வாயுவிடங்கள்- நோய் தடுப்பாக செயல்படுகின்றது.
தேன்
குணபத்தில் நுண்ணுயிர் பெருக்கமடையச் உதவுகின்றது.
இஞ்சி
பன்றிக்கறி விரைவில் வேக வைப்பதற்கும் கொழுப்புச்சத்து விரைவில் கரைவதற்கும் பயன்படுகின்றது. பாக்டிரியா எதிர்ப்பு சக்தி உள்ளது
பன்றி மாமிசம்
பயிர்களில் அதிக வளர்ச்சியை கொடுக்கின்றது உயர்வான
உயிர் ஊட்ட உரமாகும். குணபம் தயாரிக்க ஆதாரப் பொருள்
அதிக கொழுப்பபுச் சத்து உள்ளது. பயிர்களில் நோயற்றும்
தன்மையை அதிகப் படுத்துகின்றது.
பன்றி சாணம் அல்லது ஆட்டு உதப்பி
பயிர்களின் வளர்ச்சிக்கு பாக்டீரியாக தடுப்பியாகும்.
அல்பால்பா – குதிரைமசால் தழையிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இதில் துத்தநாகச்சத்து, மெக்னிசிய சத்து, சுண்ணாம்பு சத்து, கந்தக சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ளது இதை வாரக குணபத்தில் சேர்த்துள்ளதால் தென்னையில் பிஞ்சுகள் உதிரும் தன்மை குறைகின்றது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories