வறட்சியிலும் வரம் தரும் ‘ஹைட்ரோபோனிக்’ தீவனம்

வறட்சியிலும் வரம் தரும் ‘ஹைட்ரோபோனிக்’ தீவனம்

அறிமுகம்

வறட்சி, தீவன விலை உயர்வு போன்ற காரணங்களால், விவசாயிகள் மாடுகளை சந்தைகளில் விற்பதும் அதிகரித்து வருகிறது. எனவே, தீவன தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வுகாணும் விதமாக, குறுகிய காலத்தில் வளரக்கூடிய, ‘ஹைட்ரோபோனிக்’ எனும் முளைப்பாரி தீவனத்தை பயிரிட்டு, கால்நடைகளை பராமரிக்கலாம்

பாரமரிக்கும் முறைகள்

  • ‘ஹைட்ரோபோனிக்’ எனும் முளைப்பாரி தீவனப்பயிர்களை மண் இல்லாமல் எட்டு நாளில் வளர்த்து கால்நடைகளுக்கு உணவாக தரலாம்.
  • கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றின் விதைகளை, 12 மணி நேரம் தண்ணீரில் ஊரவைத்த பின்னர், நான்கு மணி நேரம் உலரவிட வேண்டும்.
  • இவற்றை ஓர் ஈரமான சாக்கில் போட்டுவைத்தால் முளைப்பு வந்துவிடும். தொடர்ந்து, டிரேக்களில் அந்த முளைப்புகளை வைத்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது தண்ணீர் விட்டால் போதும். எட்டாவது நாளில் ஒரு அடி வரை வளர்ந்துவிடும்.
  • அவற்றை அப்படியே கால்நடைகளுக்கு தீவனமாக தரலாம். ஒரு கிலோ விதையில், 8 கிலோ தீவனம் பெறலாம்.
  • இதற்கு தண்ணீர் அதிகம் செலவாகாது. இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால், பாலில் ஒரு சதவீதம் கொழுப்பு சத்து அதிகரிக்கும். விவசாயிகள் வறட்சி காலம் மட்டுமின்றி எந்த சமயத்திலும் இம்முறையை கையாலலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories