வாழைக்காய் விரைவில் முதிர்ச்சி அடைய காயின் பருமன் அதிகரிக்க!

 

வாழைக்காய் விரைவில் முதிர்ச்சி அடைய காயின் பருமன் அதிகரிக்க!

வறண்ட நிலத்திலும் வளரும் மூலிகை தாவரங்கள் என்னென்ன?

வல்லாரை கீரை, மணத்தக்காளி ,நெல்லி, நிலாவரை ,நிலப்பனைக்கிழங்கு ,சிறுகுறிஞ்சான் ,கறிவேப்பிலை கீழாநெல்லி ,கருந்துளசி, வசம்பு ,சித்தரத்தை, ஆடாதோடை அதிவிடயம், பச்சை நாவி, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை தாவரங்கள் வறண்ட நிலத்தில் வளர்கின்றன.

கத்திரியில் வரும் இலைப்பேன் கட்டுப்படுத்த ஏதாவது இயற்கை வழி உண்ட?

கத்திரி செடிகளில் இலைப்பேன் தாக்கத்தினால் 4 நாட்கள் புளித்த 2 லிட்டர் மோரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் இலைப்பேன் கொட்டிவிடும். இதன் பயனாக செடியில் பல புதிய துளிர்கள் வளரும்.

தென்னை குருத்து அழுகிய நிலையில் உள்ளது அதற்கு என்ன செய்யலாம்?

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம் அல்லது வேர் வழியாக கொடுக்கலாம்.

2 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து தொழுவுரத்தை மரத்திற்கு இடவேண்டும்.

நேந்திரன் வாழைக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும்?

வாழைக்குலை கடைசி சீப்பு வந்தவுடன் அதன் முனையில் உள்ள பூவை ஒடித்து விட வேண்டும். இதனால் காய் விரைவில் முதிர்ச்சி அடையும்.

வாழைப்பூவுடன் சிறு பிளாஸ்டிக் பையில் 4 மில்லி பஞ்சகவ்யா மற்றும் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டலாம். அல்லது வாழைக்குலை மேல் பஞ்சகவ்ய கரைசல் தெளிக்கலாம். இதனால் காயின் பருமன் கூடும்.

கைராளி மற்றும் கிராம பிரியா கோழி முட்டை இடுவது குறைகிறது. முட்டை
இடுவது எப்படி அதிகரிக்கலாம்?

அசோலா கொடுக்கலாம். மக்காச்சோளம் ,எள்ளுப் புண்ணாக்கு ,கடலை புண்ணாக்கு, தாது உப்பு போன்றவைகளை முட்டையிடும் கோழிகளுக்கு கொடுக்கலாம்.

இதுபோன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அரைக்கப்பட்ட தானியங்களை உணவாக கொடுப்பதன் மூலம் அதிக முட்டைகள் இடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories