அதிக மகசூல் தருவதில் ஒன்றாக வாழை மரம் உள்ளது. அந்த வகையில் வாழை பச்சை, ரஸ்தாளி, செவ்வாழை போன்ற பலவகையான ரகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.
வாழையில் பூவன், ரஸ்தாளி உள்ளிட்ட பல ரகங்கள் உள்ளன.பூவன் வாழை கதலி , பங்களா என்ற பெயர்கள் உள்ளன. இந்த வாழைதாரில் 10 முதல் 12 சீப்புகளும் 150 முதல் 200 காய்களும் எடையானது 20 முதல் 25 கிலோ வரையும் இருக்கும். இந்த ரகம் ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த ரக வாழையில் வாடல் நோய் ,பாக்டீரியா கிழங்கு அழுகல் நோய் ,கூன்வண்டு ஆகியவை தாக்காது. இதில் நூற்புழு தாக்குதல் அதிகம் காணப்படும்.
இந்த ரகத்தின் வயது 14 முதல் 15 மாதங்கள் ஆகும். இந்த வாழைத்தாரில் ஏழு முதல் ஒன்பது சீ ப்புகளும் 80 முதல் 150 காய்களும் இருக்கும். இந்த ரகம் வாடல் நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறது .இவற்றில் இலைப்புள்ளி நோய் மற்றும் நூற்புழுக்களின் சேதம் அதிகமாக இருக்கும்.
மோந்தன் ரகம் உள்ளது. இந்த வாழை ரகமானது வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இதன் வயது 13 முதல் 14 மாதங்கள் ஆகும் .இது ஒரு தாரில் 4 முதல் 6 சீப்புகளும் 45 முதல் 60 காய்கள் வரை காய்க்கும் .நிழற்பாங்கான பகுதி மற்றும் தென்னையில் ஊடுபயிராக பயிரிடலாம். காய்கள் சமையலுக்கு ஏற்றது. இந்த ரகத்தை வாடல் நோய் அதிகம் தாக்கும் .இலைப்புள்ளி மற்றும் நூற்புழு தாக்குதலை ஓரளவு தாங்கி வளரும். கிழங்கு அழுகல் நோய் தாக்குதல் இருக்காது.
கற்புறவல்லி ரகம் உள்ளது. சாம்பல் பூசியது போன்று பழத்தோல் மேல் இருப்பதால், இது சாம்பல் வாழை என்றும் அழைக்கப்படுகிறது. வறட்சியான இடங்களுக்கும் ஏற்ற ரகமாகும் .இதன் வயது 13 முதல் 14 மாதங்கள் ஆகும் இதில் வாடல் நோய் தாக்குதல் அதிகமாகவும்,கூன்வண்டுத் தாக்குதல் குறைவாக இருக்கும்.
பச்சை வாழை, மோரிஸ் , நேந்திரன் ,செவ்வாழை , கிராண்ட் 9 உள்ளிட்ட ரகங்கள் உள்ளன .இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது
இதன் வயது சுமார் 18 முதல் 20 மாதங்கள் ஆகும் .ஒரு தாரில் 6 முதல் 8 சீப்புகள் இருக்கும். இதனை மலைப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதிகளில் பயிரிடலாம்.புஞ்சை வாடல் நோய் இந்த ராகத்தை தாக்காது. ஆனால் முடிக்கொத்து நோய் மற்றும் இலைப்புள்ளி நோய்களின் தாக்குதல் இருக்கும்.