வாழையில் கூன்வண்டை கட்டுப்படுத்த

வாழையில் கூன்வண்டை கட்டுப்படுத்த
வாழையில் கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டங்களில் சேரும் காய்ந்த இலைகளையும், வாழை மட்டைகளையும் அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். மரத்தில் இருந்து வாழைத்தார் வெட்டிய பின் மரத்தை பிளந்து உட்தண்டு பகுதிகளை நீக்கி விட வேண்டும். மேலும் 1 முதல் 2 அடி நீளமுள்ள வாழை மர தண்டுகளை நீளவாக்கில் பிளந்து, பிளந்த உட்பகுதி நிலத்தை நோக்கி இருக்குமாறு தோட்டத்தில் ஆங்காங்கே வைத்து விடவேண்டும். இந்த பிளந்த தண்டுகளில் கூன்வண்டுகள் கவரப்படு தண்டுக்குள் வண்டுகள் இருக்கும் பின் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம் அல்லது வயலில் ஈரப்பதம் இருக்கும் பொழுது பூஞ்சாண பூச்சி கொல்லிகளான பி10வேரியா மற்றும் மெட்டாரைசியம் போன்றவற்றை தெளித்து உயிரியல் முறையில் கட்டுப்பாடுத்தலாம்
கூன்வண்டு தாக்கப்பட்ட வாழை மர தண்டுகளில் துவாரங்கள் காணப்படும். பின்னர், அவற்றிலிருந்து ஓருவித திரவம் வடிய தொடங்கும். நாளடைவில் மரங்கள்; வாடி குலையுடன் ஓடிந்து விடும். இந்த கூன் வண்டுகளை கட்டுப்பாடு போரேட் ஃ கார்போ பியூரான் போன்ற குருனை மருந்துடன் சம பங்கு மணல் கலந்து வாழை தண்டின் பட்டைகளில் இடலாம் அல்லது ஓரு பங்கு மேனோகுரோட்டாபாஸ் மருந்துடன் 2 பங்கு தண்ணீர் என்ற வீதத்தில் மருந்து தயாரித்து ஓரு வாழை மரத்திற்கு 4 மில்லி வீதம் தண்டு பகுதியில் ஊசி மூலம் செலுத்தலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories