வாழை காய்களில் வெண்புழு காணப்படுகிறது .கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
வாழைப்பூ ஒடித்தவுடன் சிறு பிளாஸ்டிக் பையில் 5 மில்லி பஞ்சகாவ்யா மற்றும் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டலாம் அல்லது வாழைக்குலை மேல் பஞ்சகாவ்யா கரைசல் தெளிக்கலாம்.
மக்காச்சோளத்தில் தண்டு புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?
அவரை அல்லது தட்டை பயிரை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தண்டுதுளைப்பான் பாதிப்பை குறைக்கலாம்.
விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் அல்லது பயிர்கள் மேல் தெளித்தால் தண்டு புழுக்களை குறைக்கலாம்.
VAM என்றால் என்ன? அது எங்கு கிடைக்கும்?
VAM ஆர்பஸ்குலார் மைக்கோரைசா என்பது பயிர்களுக்குத் தேவையான மணிச்சத்து ,கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும்., வேர் உட்பூசணம் ஆகும் .இவை வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்.
நெல் வயலில் அசோலா எவ்வாறு வளர்ப்பது மற்றும் பயன் பெறுவது?
நாற்று நடவு செய்த 7வது நாள் வயலில் அசோலாவை ஏக்கருக்கு 5 கிலோ தூவவேண்டும் .2o வது நாள் அசோலா வளர்ந்து படர்ந்து விடும் .முதல் களை எடுக்கும் போது சேற்றில் மிதித்து விடலாம் .நன்கு மிதி படாமல் இருக்கும் அசோலா மீண்டும் வளர்ந்துவிடும். அதனை இரண்டாவது களை எடுக்கும் போது சேற்றில் மிதித்து விடலாம்.
இவ்வாறு செய்வதால் நீர் ஆவியாதல் தடுக்கப்படும். இது ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 கிலோ வரை தழைச்சத்தை தரும். இது காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து நெற்பயிருக்கு கொடுக்கும். வயல்களில் களை வளராது. மேலும் யூரியாவின் ஆள் எந்த அளவு பயன் உண்டோ அந்த அளவிற்கு அசோலாவால் பயன் உண்டு. மற்ற உரங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக அசோலா பயன்படுத்துவதன் மூலம் மண் வளமும் பாதுகாக்கப்படும்.
கோழிப்பண்ணைக்கு பாம்பு வராமல் தடுக்க என்ன செய்வது?
கோழிப் பண்ணையை சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறியாநங்கை, புதினா செடியை கோழி பண்ணையை சுற்றிலும் வளர்க்கலாம்.
பண்ணையைச் சுற்றி பூண்டு சாற்றை தெளித்தால் பாம்பு வராது.