வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்

வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்

வாழை
தீ நுண்மங்கள்
வாழையில் நுட்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்ய்

வாழை

உற்பத்தி மற்றும் உணவாக உட்கொள்வதிலும் வாழை நான்காவது இடத்தை பெறுகிறது. இவைகள் ஆசியாவில் தோன்றி, பரவி, இன்று உலகின் 130 நாடுகளில் வளர்க்கின்றன. 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோரயமாக ஆயிரம் கோடி டன்ஸ் விளைவிக்கப்படுகிறது 1. வாழையில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சை, தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகளால், முழு உற்பத்தியில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவைகளின் நோய் தாக்குதல்களில், தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகள் எளிதில் நீங்காது மட்டுமல்லாமல், உற்பத்தியை கடுமையாக பாதிக்ககூடியன 2,3 . வேதி மருந்துகளினால் பாக்டீரியா, பூஞ்சை நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், தீ நுண்மங்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆகையால் நோயை அழிப்பதைவிட, வரும் முன் காப்பதே முக்கியம்.

தீ நுண்மங்கள்

  • வாழை நுனி மொசைக் நுண்மம் 4 – Banana bract mosaic virus: இவைகள் நேர்மறை (+) கொண்ட, ஓரிழை ஆர்.என்.எ தீ நுண்மம் (RNA) ஆகும். இவைகள் போட்டி (Poty) பிரிவில் வருபவை ஆகும்.
  • வாழை குறை மொசைக் நுண்மம் 5 – Banana mild mosaic virus , வாழை தீ நுண்மம் X 6- Banana virus X (BVX) இவை இரண்டும் பிலேக்ஸ்சி விரிடே (Flexiviridae) குடும்பத்தில் வருபவை ஆகும்.
  • வாழை இழை கொத்து தீ நுண்மம் 7- Banana bunchy top virus: இவைகள் ஓரிழை உடைய டி.என்.எ ( DNA) தீ நுண்மம் ஆகும். நானோ நுண்மம் (nano virus) என்னும் பிரிவில் வருபவை.
  • வாழை வரி நுண்மம்- 8 Banana streak virus
  • பார ரெட்ரோ நுண்மத்தில் (pararetro virus) வருவது. மேலும் மரபு இழையில் உள்ள வேறுபாட்டை பொருத்து, மூன்று வகையாக பிரிக்கலாம்.
  • வாழை வரி தங்க விரல் நுண்மம் -Banana streak Gold Finger virus (BSGFV),
  • வாழை வரி மைசூர் நுண்மம்- Banana streak Mysore virus (BSMyV)
  • வாழை வரி ஒபனோ ல் எவாய் நுண்மம் – Banana streak Obeno L’Ewai virus (BSOLV)
  • வாழை மறு- இறத்தல் நுண்மம் 9- Banana die-back virus, நைஜிரியா என்ற நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

மேலும் தீ நுண்மங்கள்  பல்கி பெருகும் போது, அதன் மரபு இழைகள் நகலாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வினைகளின் ஈடுபடும் நொதிகள் செயல்கள் மிகையாக இருந்தாலும், மரபுஇழைகளின் ஏற்படும் பிழை-ஒற்றுகளை (தவறுகளை) (mis-match) சரி செய்ய முடியாத தன்மையில் உள்ளன (Proof-reading activity). இதனால் ஒரே தீ நுண்மத்தின் மரபு இழைகளின் வரிசையில் பல மாறுதல்கள் அல்லது வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் ஒரே வாழையை  வேறுப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பல தீ நுண்மங்கள் தாக்கும் பொழுது, அவைகளிடையில் ஏற்படும் உள்-இணைவுகள் அல்லது மறு-கலத்தல்கள் (Recombination) புதிய தீ நுண்மங்களை ஏற்படுத்துகின்றன. இவைகள் முன்பை விட வீரியம் கூடுதலாகவும் பெருத்த இழப்புகளையும் ஏற்படுத்த வல்லன.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories