பருத்திக்கு முதல் பூச்சிக்கொல்லி மருந்து எத்தனை நாளில் அடிக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்.
பயிர் வளர்ந்த இரண்டு மாதங்களில் அடிக்கலாம். பூச்சிகள் தென்படும் முன்பு இயற்கை பூச்சி விரட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
தக்காளி செடி ரக மற்றும் செடி பாதுகாப்பு மற்றும் உரம் இடுதல்.
பிகேஎம் 1 ,பூசாரி ,பையூர் 1 போன்ற ரகங்கள் பயிரிட ஏற்ற ரகமாகும், தக்காளி பயிரில் கற்பூர கரைசல் தெளித்தல் அளவுக்கு அதிகமாக பூக்களை உருவாகும், தக்காளி செடியில் பூக்கள் உதிர்வதை தடுக்க தேங்காய் பால் ,கடலை புண்ணாக்கு, மோர்க் கரைசல் தொடர்ந்து தெளித்தால் பூக்கள் உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம் .
வாழை குலை தள்ளி ஏறக்குறைய 110 நாட்கள் ஆகிறது.அறுவடை செய்யலாம அல்லது மரத்திலேயே பழுத்த பின்பு அறுவடை செய்யலாம் .எப்படி பழுக்க வைப்பது.
நன்கு தி ரண்டை தார்களை அறுவடை செய்யலாம
பழங்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க நன்றாக விளைந்த முற்றிய காய்களை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். இதனால் ஓரிரு நாட்களில் காய்கள் பழுத்து விடும் .வைக்கோல் மீது காய்களை அடுக்கி மேலேயும் வைக்கோலை கொண்டு மூடி விட்டால் வெளிப்படும் வெப்பத்தினால் காய்கள் பழுத்து விடும் . புகையினால் காய்களைப் பழுக்க வைக்க அதற்கு இருட்டான அறையில் எலுமிச்சை புல்லை எரித்து புகையை போடுவதால் பழுக்க வைக்கலாம். சூரிய ஒளி புகாத இருட்டு அறையில் காய்களை அடுக்கி வைப்பது வெப்பத்தால் காய்கள் பழுத்து விடும்.