வாழை சாகுபடியில் அதிக விளைச்சல் பெறும் டிப்ஸ் இதுதான்!

வாழைக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதே சிறந்தது எனவும், இதன் மூலம் கூடுதல் மகசூலைப் பெற முடியும் என்றும் வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை துறை முதல்வர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறுகையில் :
வாழை சாகுபடியில், கன்று நடவு செய்த உடன் உயிர்த் தண்ணீர், பின்பு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் (Drip irrigation)
சொட்டு நீர்ப்பாசன முறையில் வாழைக்குலை விரைவில் உருவாவதுடன், 40 முதல் 45 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.சொட்டு நீர் அமைப்பில் தினமும், 2 முதல் 3 மணி நேரம் பாசனம் செய்வதேப் போதுமானதாகும் என்றார்.

குலை தாமதம் (Shuffle delay)
சரியாக நீர்பாய்ச்சாமல் இருந்தால் குலை உருவாவது தாமதமாகும்.காய்கள் முதிர்ச்சியடைவதும், தரமும் பாதிக்கப்படும் என்றார்.

சொட்டுநீர் பாசனத்தின் பலன் (Benefit of drip irrigation)
இது, சொட்டுநீர் பாசனத்தில் தவிர்க்கப்படுகிறது. 50 சதவீதம் வரை மின் சக்தி மற்றும் வேலையாட்களுக்கு ஆகும் செலவும் குறைகிறது.ஹெக்டேருக்கு, 1,200 முதல் 1,500 கிலோ வாட் மின்சக்தி சேமிக்கப்படுகிறது எனவே,

மகசூல் அதிகரிப்பு (Yield increase)
பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல், 30 முதல் 50 சதவீதம் அதிகமாகிறது.

எனவே விவசாயிகள் தோட்டக்கலை துறையில் மானியம் பெற்று, வாழைக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories