வாழை சாகுபடியில் ஏற்படும் மகசூல் இழப்பை தடுப்பது எப்படி? இதை வாசிங்க தெரியும்..

வாழை சாகுபடியில் ஏற்படும் மகசூல் இழப்பை தடுப்பது எப்படி?

தமிழகத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக, சாகுபடி செய்யப்பட்டுள்ள பெருவாரியான வாழைத் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க அதிகம் வாய்ப்புள்ளது. இந்த தண்ணீரை தோட்டங்களில் இருந்து வடிக்கும்போது 2 மற்றும் 3ம் தவணையாக இடப்பட்டுள்ள பொட்டாஷ் உரம் தண்ணீரில் கரைந்து வீணாகும் நிலை உருவாகிறது.

இதன் காரணமாக வாழைக்கு தேவையான பொட்டாஷ் உரம் சரிவர கிடைக்காத சூழல் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் வாழையில் 20 முதல் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படலாம்.

இதைத் தவிர்க்க பருவமழை நின்ற உடன், வாழை மரம் ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 150 கிராம் மூரியேட் ஆஃப் பொட்டாஷ் மற்றும் 100 கிராம் டோலமைட் (கால்சியம் – மக்னீசி யம் கார்பனேட்) உரங்களை மண்ணில் இடவேண்டும். மேலும், இலை வழியூட்டமாக, 1 சதவிகித பொட்டாஷியம் நைட்ரேட் கரைசலையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கும் 10 கிராம்) இலை மேல் தெளிக்க வேண்டும்.

மேலும், வாழைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துகளும், மழை நீரை தோட்டங்களில் இருந்து வடிக்கும்போது வீணாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் பால.பத்மநாபன் கூறுகையில், வாழையில் இழப்புகளை சரிகட்ட, வாழைக்கு நுண்ணூட்டச் சத்துகள் இடுவது மிகவும் அவசியம்.

இதற்கு, வாழை நுண்ணூட்டக் கலவையான பனானா சக்தியை இரண்டு சதவிகித கரைசலாக (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம்) இலைமேல் தெளிக்கவும். ஒரு கிலோ பனானா சக்தி நுண்ணூட்ட உரத்தின் விலை ரூ.150ஆகும்.

எனவே, வாழை சாகுபடியில், தேங்கி நிற்கும் மழை நீரால் ஏற்படக்கூடும் இத்தகைய பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் இழப்புகளை, மேற்குறிப்பிட்ட முறையில் நிவர்த்திச் செய்து, அதிக மகசூல் பெறலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories