#வாழை சாகுபடியில் காப்பர்சத்து பற்றாக்குறை மற்றும் நிலத்தில் உப்புபடிதல்

#வாழை சாகுபடியில் காப்பர்சத்து பற்றாக்குறை மற்றும் நிலத்தில் உப்புபடிதல்
வாழை நடவு செய்த 60 நாட்களுக்கு மேல் நுனியில் உள்ள இலை சுருண்டு வலைந்து காணப்படும். இவ்வாறு இருந்தால் நிலத்தில் போதுமான காப்பர்சத்து பற்றாக்குறையாகும் மேலும் இலைகள் விரியாமல் அப்படியே மடங்கும். இவ்வாறு இருந்தால் மகசூல் இழப்பு ஏற்படும்.
இவற்றை கட்டுப்படுத்த
பச்சைப்பவுடர்( காப்பர்) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் என்ற விகிதத்தில் கலந்து மாலைவேளையில் தெளித்தால் இலைகள் சுருண்டு வளைவதும் இலைகள் மடங்காமலும் இருக்கும். இதனால் நமக்கு அதிக மகசூல் கொடுக்கும்.
நிலத்தில் உப்பு படிதல்
மண்ணின் கார அமில நிலை பொதுவாக 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அவை விவசாயத்திற்கு ஏற்ற மண் . மண்ணில் உப்பு படியும்போது மழை பெய்யும்போது மண் களித்தன்மை ஆகிவிடும்.
வெயில் காலத்தில் மண் பிளந்து விடும். இப்படிப் பட்ட நிலத்தில் கரிமச்சத்து , அங்ககசத்து குறைந்து காணப்பட்டு மண் வளம் கெட்டுவிடும். விவசாயம் சரியாக வராது.
ஆகவே இதை சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு ஒரு டன் ஜிப்சம் மண்ணில் இட்டு நன்றாக வயலை உழவு செய்ய வேண்டும்.
நிலத்தில்; தண்ணீரை நிறுத்தி படிய வைத்து தண்ணீரை வெளியே எடுத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் கார நிலை குறைந்து மண் பொதுபொதுப்பு வந்து விடும். பிறகு விவசாயம் செய்தால் நல்ல முறையில் வரும் தொழுஉரம் அதிகமாக மண்ணுக்கு இட்டால் களர்நிலையும் குறையும்.
மேலும் இலை, தழைகள் மண்ணில் இட்டு உழவு செய்து விவசாயம் செய்தால் நன்றாக மகசூல் கொடுக்கும்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories