வாழை சாகுபடி முறை உங்கள் பார்வைக்கு …

வாழை சாகுபடி முறை உங்கள் பார்வைக்கு …
🍂சாகுபடி வயல் தயாரிப்பு :

🍂கன்று தேர்வு :

🍂 கிழங்கு நேர்த்தி:

🍂நடவு முறை:

🍂ஊடுபயிர் :

🍂நீர் மேலாண்மை :

🍂உர மேலாண்மை :

🍂வளர்ச்சி ஊக்கிகள் :

🍂பயிர் பாதுகாப்பு :

🍂அறுவடை :
வாழை சாகுபடி செய்ய வயல் தயாரிப்பு [ஒரு ஏக்கர்] :

🍂 சாகுபடியில் உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டியை பயன்படுத்தினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

🍂 வாழை சாகுபடி செய்யும் வயல் தயாரிக்கும் முன் உழவு ஓட்டும் சமயத்தில் கொம்பு சாண உரம் 100 கிராம் + சாணம் மூலிகை உரம் 1 கிலோ கரைசல் தெளித்து. மண்ணில் நுண்ணுயிரி பெருக்கத்திற்கும் + மண் தான் இழந்தவளத்தை மீண்டும் பெறுவதற்கும் பேருதவியாக இருக்கும்.

🍂பலதானிய விதைப்பு செய்து 45 To 50 நாளில் மடக்கி உழுது விட வேண்டும்.

🍂 ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 டன் மக்கிய தொழு உரம் பயன்படுத்த வேண்டும். இதுவே ஊட்டமேற்றிய தொழு உரமாக இருந்தால் 1 டன் அளவு போதும்.
கன்று தேர்வு :

🍂 உங்கள் சூழ்நிலை மற்றும் உங்கள் பகுதிக்கு ஏற்ற ரகத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் + நோய் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ரகமாக தேர்வு செய்தால் கூடுதல் சிறப்பு.

🍂அதிகப்படியான ரசாயனம் பயன்படுத்த வயல் மற்றும் நோய் தாக்குதல் இல்லாதவளாக நல்ல தரமான வயலின் ஈட்டி இலை கன்றுகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

🍂 தேர்வு செய்த கன்றுகளை சுத்தம் செய்து 12 Inc அளவுக்கு வெட்டி தயார் செய்து கொள்ளுங்கள்.
கிழங்கு நேர்த்தி :

🍂 உயிராற்றல் வேளாண்மை இடு பொருட்களான சாண மூலிகை உரம் + கொம்பு சாண உரம் கரைசலில் விதைக் கிழங்குகளை நேத்து செய்து கொள்ளுங்கள்.

🍂அல்லது பஞ்சகவ்யம் , ஜீவாமிர்தம் , சூடோமோனாஸ் புளோரசன்ஸ் போன்ற ஏதோ ஒரு இயற்கை இடுபொருட்களை விதைகளை விதை நேர்த்தி செய்து கொள்ளுங்கள்.

🍂கிழங்கு நேரத்தின் முக்கியத்துவம் விதைக் கிழங்கு மூலம் பரவும் நோய் மற்றும் பூஜாணங்களை எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

🍂 கன்றுகளின் ஆரம்பநிலையில் தேவையான சத்துக்களை முறையாக எடுத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும்.
நடவு முறை :

🍂 குழி அமைப்பு (1.5) ஒன்னரை அடி நீளம் ஆழம் அகலம் குழி எடுத்து பத்து நாட்கள் நன்கு ஆற விடுங்கள்.

🍂 வாழையைப் பொறுத்தவரை அன்று நடு அல்லது கொன்று நடு என்று குறிப்பிடுவார்கள். வாழைக் கன்றை எடுத்த அன்றே நடவு செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

🍂 உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டியின் படி கீழ்நோக்கி நாளில் வரும் (விதை, பழம்) காண நாள் அல்லது சந்திரன் எதிர் சனிக்கு முன் உள்ள 48 மணி நேரத்தை தேர்வு செய்து நடவு செய்யுங்கள்.

🍂 வாழை நடவு செய்யும் பொழுது அடி உரமாக :

🍃நடவு குழியில் 2 கிலோ அளவிற்கு ஊட்டமேற்றிய தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தொழு உரமாக இருந்தால் 5 கிலோ + 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு அல்லது எள்ளு பிண்ணாக்கு இதனுடன் வயலின் சத்தான மேல் மண் கலந்து குழியை நிரப்பி நடவு செய்ய வேண்டும்.

🍂 நடவு செய்த பிறகு நீர் பாய்ச்சும் சமயத்தில் ஏதோ ஒரு திரவ வடிவிலான இயற்கை இடுபொருள் + அல்லது உயிராற்றல் இடு பொருட்களை வழங்கினால் கூடுதல் சிறப்பு.
நீர் மேலாண்மை :

🍂வாழையில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நீர் மேலாண்மை ஆகும். குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் கொடுத்தால் போதும். வாழை சாகுபடி பொறுத்தவரையில் வதங்க வதங்க நீர் கொடுத்தால் சிறப்பான வளர்ச்சியும் நோய் தாக்குதல் இல்லாமலும் இருக்கும்.

🍂இது அந்தந்த பகுதி சீதோசன நிலை மற்றும் மண் வாகு பொருத்து அமையும். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

🍂வாழைக்கு ஏற்ற மண் வகை நன்கு வடிகால் வசதி உள்ள மண் கண்டங்கள் உகந்தவை.
ஊடுபயிர் :

🍂 வாழையின் வளரும் பருவத்தில் களைகளைக் கட்டுப்படுத்தவும் + கூடுதல் வருவாய் பெறுவதற்கு ஊடுபயிர்கள் செய்வது மிகவும் சிறப்பு.

🍂காய்கறி வகைகள்.

🍂மிளகாய், வெங்காயம், உளுந்து, தட்டப்பயிறு, கடலை.

🍂 பசுந்தாள் பயிர்கள், கீரை வகைகள், கொத்தமல்லி சாகுபடி போன்றவை செய்யலாம்.
உர மேலாண்மை :

வாழையைப் பொறுத்தவரை திட மற்றும் திரவ உரங்கள் மண்ணில் இடுதல் மிகவும் முக்கியமான செயல் :

🍂 வாழை சாகுபடியில் 60 நாட்களுக்கு ஒரு முறை இந்த உரமாக உயிரோட்ட உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தொழு உரம் ஒரு மரத்திற்கு 10 கிலோ அளவிற்கு கொடுக்க வேண்டும்.

🍂 புண்ணாக்கு வகைகள் ஒரு மரத்திற்கு ஆரம்பம் முதல் முடிவு வரை 1 முதல் 1.5 கிலோ வரை தரவேண்டும். இதை நான் ஒரு முறைக்கு 200 முதல் 250 கிராம் என்று பிரித்துக் கொடுக்க வேண்டும்.

🍂 ஒவ்வொரு முறையும் நீர் பாய்ச்சும் பொழுது ஏதோ ஒரு இயற்கை இடுபொருட்களை அல்லது உயிராற்றல் வேளாண்மை இடுபொருட்கள் முறையாக வீரிய படுத்திக் கொடுக்க வேண்டும்.

🍂 உதாரணமாக கொம்பு சாண உரம் சாணம் மூலிகை உரக் கரைசல் அல்லது ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், மீன் அமிலம், EM கரைசல் போன்றவற்றை முறையாக வீரிய படுத்திக் கொடுக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்:

வாழை சாகுபடியில் முறையாக வளர்ச்சி ஊக்கிகள் கொடுக்கவேண்டும் :

🍂 வாழை நடவு செய்து 15 நாளில் உயிராற்றல் வேளாண்மையின் இடுபொருள் கொம்பு சிலிக்கா உரம் ஏக்கருக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு 16 லிட்டர் நீரில் கலந்து இடவலமாக சுத்தி வீரிய படுத்தி தெளிப்பதன் மூலம் ஒளிச்சேர்க்கை அதிகரித்து வாழையின் வளர்ச்சி சீராகவும் எந்தவிதமான பூஞ்சான + பூச்சி தாக்குதல் அறவே வராது. தொடர்ச்சியாக கொம்பு சிலிக்கா உரம் பௌர்ணமி அன்று காலை வேளையில் மாதமாதம் தெளித்து வந்தால் கூடுதல் சிறப்பு.

🍂 சாண மூலிகை உரம் + கொம்பு சாண உரம் கரைசலை முறையாக 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கும்போது. வாழையின் நிலையான வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

🍂உயிராற்றல் வேளாண்மை இடுபொருட்களை பயன்படுத்தும்பொழுது வாழையின் நிறம், தரம், சுவை, அடுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும் .

🍂அல்லது இயற்கை இடு பொருட்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மீன் அமிலம், இஎம் கரைசல் போன்றவற்றையும் 15 முதல் 30 நாட்கள் இடைவெளியில் ஒரு முறை சீராக தெளித்து வர வேண்டும்.
பயிர் பாதுகாப்பு :

🍂பயிர் பாதுகாப்பில் முக்கியமான விஷயம் களை மேலாண்மை முறையாக 60 நாட்களுக்கு ஒரு முறை களை எடுப்பதன் மூலம் பயிருக்கு பாதுகாப்பாகவும் இருக்கும் பயிருக்கு தேவையான காற்றோட்டமும் + ஊட்டமும் முறையாக கிடைக்கும்.

🍂 முறையான கவனிப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஊக்கிகளை கொடுப்பதன் மூலம். நோய்களை எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

🍂 வாழைக்கிழங்கு சம்பந்தப்பட்ட அழுகல் நோய்கள் மற்றும் வைரஸ் நோய்கள் + இலைகள் மூலம் பரவும் வைரஸ் நோய்களை மிகவும் எளிமையாக கட்டுப்படுத்த வைரல் பேஸ்ட் ஒரு அற்புத கண்டுபிடிப்பு நம்மிடம் உள்ளது.

🍂 வாழை பொறுத்தவரையில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் கூன் வண்டு + தண்டு துளைப்பான் + இலை சுருட்டு புழு போன்றவற்றைக் கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு முறையான 🐛மெட்டாரைசியும் அனிசோபிளியே🐛பேவேரியா பேசியானா போன்றவற்றை முறையாக பயன்படுத்தினால் கட்டுப்படுத்திவிடலாம்.

🍂 வாழையில் ஐந்தாம் மாதம் முதல் வரும் பக்க கன்றுகள் மற்றும் காய்ந்த சருகுகளை முறையாக நீக்கி பராமரித்தால் வாழையின் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக இருக்கும்.
அறுவடை :

🍂வாழை ஒன்பதாவது மாதத்திற்குப் பிறகு குலை தள்ளிய பூ உடைக்கும் சமயத்தில் வாழை தார் மீது பஞ்சகவ்யம் அல்லது சாண மூலிகை உரம் மற்றும் கொம்பு சாண உரம் கரைசல் கார் மீது தெளிக்கும் பொழுது பழங்களின் தரம், நிறம், மனம், சுவை, அடுத்து வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பத்து நாட்களுக்கு ஒருமுறை என்று 3 முறை தெளித்தால் போதும்.

🍂 நன்கு தேறிய வாழைத்தார் தேர்வு செய்வது மிகவும் பழைமை பழங்கள் நன்கு உருண்டு திரண்டு வந்திருக்கும் அதேபோல் தாரில் முதல் சீப்பு பழுத்தவுடன் அறுவடை செய்வது சிறப்பு.

நன்றி
சத்தீஸ்குமார்
குடியேற்றம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories