வாழை நாரிலிருந்து கூடை பின்னி, தினசரி வருமானம் ஈட்டும் மகத்தான பெண்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினர் வாழைநாரில் இருந்து அழகான கூடைகளை பின்னி ஏற்றுமதி (Export) செய்து வருகின்றனர். இதன் மூலம் மகளிர் அனைவருக்கும் தினசரி வருமானம் கிடைத்தது என்றார்.

பயிற்சி
கைகளால் கூடை பின்னுவதற்கு மதுரை, சோழவந்தான் போன்ற ஊர்களில் இருந்து வாழை மரங்களில் (Banana Trees) இருந்து வெட்டி எடுத்து பதப்படுத்தப்பட்ட வாழை நார் மூலம் பயிற்சி (Training) அளிக்கப்படுகிறது. பின்னர், அந்த பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட 15 வகையான அழகான கூடைகள் உள்ளூரில் விற்பனை செய்யப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலமாக இப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் நாளொன்றுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை வருமானம் (Income) ஈட்டி வருவதாக தெரிவிக்கின்றனர் மற்றும்

வாழை விவசாயிகள் கோரிக்கை:
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், வடகாடு, மாங்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் வாழை விவசாயம் (Banana Farming) மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால், இப்பகுதியில் உற்பத்தியாகும் வாழையை எந்தவொரு மதிப்புக்கூட்டு முறையிலும் விற்பனை செய்ய முடியாததால் வாழை மரங்கள் வீணாகி வருகிறது. ஆகவே, வேளாண்மை துறை மூலமாக வாழை மரங்களில் இருந்து மதிப்பு கூட்டுதல் முறையை பின்பற்ற அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்று கூறினர்.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories