விதை நேர்த்தி

பயிர்களைப் பாதுகாப்பதில் முதன்மையானது விதைநேர்த்தி செய்வது தான்

பயிரை வளர்த்து அதன்பின்னர் பாதுகாப்பதை விட விதைக்கும் போதுகிடைக்கும்போது பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று

மானாவாரியில் பயிர் செய்யப்படும் கம்பு சோளம் மக்காச்சோளம் உளுந்து பச்சைபயறு எள்ளு பருத்தி சூரியகாந்தி போன்றவற்றில் வேர் அழுகல் நோயும் தக்காளி கத்தரி மிளகாய் நாற்று அழுகல் நோயும் தோன்றுகின்றது

இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது நோய் வந்த பின் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் இந்த நோயை தடுக்க விதைநேர்த்தி அவசியம்

இயற்கை முறையில் விதை நேர்த்தி

நெல் கம்பு ராகி மற்றும் மக்காச்சோளம் விதைகளை பஞ்சகாவ்யா கரைசலில் ஊற வைத்து விதைக்கலாம் அல்லது வசம்பு கரைசலில் 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு உலர வைத்து விதைக்கலாம்

மேலும் நெல் விதையுடன் 300 மில்லி ஆறிய அரிசி கஞ்சியில் நன்கு கலக்கவேண்டும் பிறகு அதனுடன் இரண்டு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து நிழலில் உலர வைத்து பிறகு விதைக்கலாம்

நெல் நாற்று தலாக இருந்தால் அசோஸ்பைரில்லம் 200 கிராம் மற்றும் பாஸ்போபாக்டீரியா 800 கிராம் ஆகியவற்றையும் நீரில் நன்கு கரைத்து அதனுடன் நீரில் நாற்றுக்களின் பயிர்கள் நன்கு நனையும்படி 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு நடவு செய்யலாம்

மஞ்சள் மற்றும் வசம்பு பவுடரை கலந்து 10 நிமிடம் கழித்து விடலாம் மேலும் புதினா இலை கரைசலில் 12 மணிநேரம் ஊறவைத்து விதைக்கலாம்

பயறு வகை பயிர்கள் மற்றும் தானிய பயிர்கள் டிரைகோடெர்மா விரிடி உடன் கலந்து விதைக்கலாம் மேலும் காய்கறி விதைகளை டிரைகோடெர்மா விரிடி அல்லது கரைசலில் கலந்து விதை நேர்த்தி செய்த விதைகளை செய்த விதைக்கலாம் செய்து விதைக்கலாம்

எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை விதை தலா 400 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் ஆரிய கஞ்சி ஆகியவற்றை கலந்து நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories