விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும் சூரிய ஒளி மின்வேலி அமைத்தல்!

பயிா்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் சூரிய ஒளி மின்வேலி அமைப்பது நன்கு பலன்தரும். இதற்கு 50 சதவிகித அரசு மானியமும் (Subsidy) கிடைக்கிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாகும். இதற்கு அடுத்தபடியாக, அதைச் சாா்ந்த கால்நடை வளா்ப்புத் தொழிலில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனா்.

இம்மாவட்டத்தில் 1.40 லட்சம் ஹெக்டேரில் மட்டும் விவசாயிகளால் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறிப்பாக ஈக்காடு, கல்யாணகுப்பம், சிவன்வாயல், கோயம்பாக்கம், கீழக்கொண்டையாா், பன்னூா், கீழச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை நாசம் செய்து வருகின்றன.

பயிர்களைப் பாதுகாக்க ( Crop Protection)
இதுபோன்ற நிலையைத் தவிா்க்க, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசு திட்டம் மூலம் சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் திட்டத்தை, செயல்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் மாவட்டம்தோறும் தலா 3,456 மீட்டா் வரை சூரிய மின்வேலி அமைக்க, விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் திட்டத்துக்கு அதிகளவு ஒதுக்கீடு செய்ய விவசாயிகள் விரும்புகின்றனா்.

இது குறித்து வேளாண்மை பொறியியல் துறை அதிகாரி சமுத்திரம் கூறுகையில்,
யானை போன்ற பெரிய வன விலங்குகள் உள்ள மாவட்டங்களைத் தவிா்த்து, மற்ற மாவட்டங்களில் காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க சூரிய மின் வேலி அமைக்கும் திட்டம் மூலம் மானியமும் வழங்கப்படுகிறது. இதன்படி முதல் கட்டமாக கொண்டு வரப்பட்ட இத்திட்டத்துக்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்ப மின்வேலி அமைப்பை 5 வரிசை (மீட்டருக்கு ரூ.250), 7 வரிசை (மீட்டருக்கு ரூ.350), 10 வரிசை (மீட்டருக்கு ரூ.450) தோ்வு செய்து கொள்ளலாம்.
இதேபோல், தனிநபா் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஏக்கா் அல்லது 1,245 மீட்டா் வரை ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும் எனவே,

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3,456 மீட்டா் வரை சூரிய மின்வேலி அமைக்க ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories