விளைச்சலை அதிகப்படுத்தும் மூலிகை தயிர்மிக்சர் தயாரிப்பு
தயிர் மிக்சரின்; பயன்கள்
இக்கரைசல் ஒரு மூலிகை மருந்தாகும்.
மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கம் செய்யும்.
மண்ணின் வளம் பாதுகாக்கப் படும்.
மண்ணுக்கு நுண்
சத்து அதிகரிக்கும்.
பழங்கள் அதிக ருசியுடையதாக இருக்கும்.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது.
பயிர்கள் காய்கறிகள்இ ஒரே சீராகக் காணப்படும்.
பழ அழுகல் நோயைக் கட்டுப் படுத்தும்.
பழ ஈயைக் கட்டுப்படுத்தும்
தேவையான பொருட்கள்
வேப்பங்கொட்டை பவுடர் 1 கிலோ
தயிர் 2 லிட்டர்
அதிமதுரம் தூள் 10 கிராம்
கடுக்காய் பொடி 10 கிராம்
நீர் 5 லிட்டர்
பசுங்கோமியம் 3 லிட்டர்
செய்முறை
முதலில் ஒரு மண் பானையில் வேப்பங்கொட்டை பவுடர் 1 கிலோவை 5 லிட்டர் நீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் இதனை வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். எடுத்த சாறுடன் 3 லிட்டர் பங்சுகோமியம்,2 லிட்டர் பசுந்தயிரை சேர்த்து இக்கரைசலை 12 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
இதனை வடிகட்டியவுடன் அதிமதுரம் தூளையும். கடுக்காய் பொடியையும் சேர்க்க வேண்டும். பின்பு தூய்மையான வேப்ங்கொட்டை மூலிகை தயிர் மிக்சர் சாறு 8 லிட்டர் கிடைக்கும்.
பயன்படுத்தும் முறை
இக்கரைசல் 1 லிட்டர் 10 லிட்டர் நீர் என்ற விகிதத்தில் கலந்து முருங்கை, மரம் மற்றும் காய்கறி பயிர்களுக்கு காலை மாலை வேளைகளில் அடித்தால் பூப்பூக்கும் பருவகாலத்தில் பவர் ஸ்பிரேயர் மூலம் அடித்தால் பூஉதிராது காய்கள் அதிகமாக பிடிக்கும்.