பொதுவாக விவசாயிகள் நடவு அல்லது விதைப்பு செய்யும் போது நாட்களை அறிந்து செயல்படுவார்கள். அதாவது விதைப்பு செய்யும் நாள் கீழ்நோக்கு நாளா? அல்லது மேல்நோக்கு நாளா என பார்த்து செயல்படுவார்கள்.
ஏன் இந்த நாட்களில் மட்டும்தான் விதைப்பு மேற்கொள்ள வேண்டும்? என சிலருக்கு கேள்வி எழலாம். விவசாயிகள் இவ்வாறு நாள் பார்த்து செயல்படுவதில் சில முக்கிய காரணங்கள் அடங்கியுள்ளது. அதைப்பற்றி இங்கு காணலாம்.
ஏன் நாட்கள் அறிந்து செயல்படுகிறீர்கள்?
சில குறிப்பிட்ட நாட்களில் விவசாய வேலைகள் செய்தால் நமக்கு ஆரோக்கியமான தாவரங்கள் வளர்ந்து அதிக விளைச்சலையும் தரமான மற்றும் சுவை கூடிய விளைபொருட்களை கொடுக்கும்.
அதாவது நமது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் மற்றும் நிர்வாகிகள் அவற்றின் அடிப்படை சுற்றுப்பாதையில் குறிப்பாக சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நிகழ்வுகளை தாவரங்களிலும் மண்ணிலும் சில மாற்றங்கள் ஏற்படும்.
அதனையே கணக்கிட்டது மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் என அறியப்படுகிறது . அதற்கு ஏற்றவாறு விவசாய பணிகளும் செயல்படுகின்றன.
மேல் நோக்கு நாட்கள்
இந்த நாட்களில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம் தொடர்ந்து 13.6 நாட்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும்.
எனவே இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்கு மேலுள்ள பகுதிகள் வளர்ச்சி வேகம் அதிகரிக்கிறது. ஆகவே இந்த நாட்களில் சில விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விதைகளை நேரடியாக விதைப்பு செய்தல் மற்றும் நாற்றுகளுக்கான விதைப்பு மேற்கொள்ளுதல் ஆகும்.
மேலும் இந்த நாட்களில் இலைவழி ஊட்டமாக உரங்களை நீரில் கரைத்து தெளிக்கும் பணியை மேற்கொள்ளலாம்.
கீழ்நோக்கு நாட்கள்
இரண்டு நாட்களில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 13.6 நாட்கள் (சுமாராக )தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும்.
இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்குள் உள்ள பகுதிகள் வளர்ச்சி அதிகரிக்கின்றது. மண்ணிலும் நுண்ணுயிரி பெருக்கமும் அதிகரிக்கிறது.
எனவே இந்த நாட்களில் நாற்றுகளை நடவு செய்தால் (மரவள்ளி குச்சிகளை கரும்பு கரணைகள்) உள்ளிட்ட நடவு பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் இந்த நாளில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பு அவற்றை நிலத்தில் இடுதல், உழவு செய்தல் உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொள்ளலாம்.