பன்னீர் ரோஜா நடவு செய்து ஒரு வருடம் ஆகிறது. ஆரம்பத்தில் பூ பூத்தது போல இப்போது பூக்கவில்லை பூக்கள் சிறியதாக மாறிவிட்டது என்ன செய்வது.
ரோஜா பூ செடிக்கு உரம் போட்டு மண்ணை கிளறி விட்டு பிறகு நன்கு மக்கிய உரம் இட வேண்டும். உரமிட்ட பிறகு நீர் விட வேண்டும் .மண்புழு உரம் இடுவதால் கோடைகாலத்தில் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம். பிண்ணாக்குக் கரைசலை தயார் செய்து ஊற்றுவதால் செடிகள் நன்றாக பூக்கும்.
கற்பூரத்தை கரைக்க எளிமையான பொருட்கள் எது.
கற்பூரம் தண்ணீரில் கரையாது அதனால் நீலகிரித் தைலம் கற்பூரத்தைகரைக்கும் தன்மை கொண்டது .இதனை உபயோகித்து கற்பூரத்தை கரைத்துக் கொள்ளலாம்.
வீட்டுத் தோட்டத்தில் தேன் கூடு கட்டி உள்ளது அதை தடுக்க புகைமூட்டம் போட்டும் பயனில்லை என்ன செய்வது
அதிகமா புகை வருமாறு புகையை கொடுத்தால் தேனி கூட்டம் ஓடி விடும்.