வீட்டு தோட்டத்திற்கு கடலைப்புண்ணாக்கு கொடுக்கலாமா?
கடலை புண்ணாக்கு பயன்படுத்துவது சிறந்தது.
கடலைப்புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு தெளிக்கலாம் அல்லது வேர் வழியாக கொடுக்கலாம்.
கள்ளி பூச்சி தாக்குதலுக்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளிக்கலாமா? எவ்வளவு தெளிக்கலாம்?
பச்சை மிளகாய் 250 கிராம், இஞ்சி 250 கிராம் ,பூண்டு விழுது 250 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் கோமியத்தில் ஊறவைத்து வடிகட்டி 300 மில்லி எடுத்து 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் கள்ளி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
நெற்பயிரில் பூச்சி தாக்குதலுக்கு எந்த மருந்து அடிக்க வேண்டும்?
வாரம் ஒருமுறை மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை பாசன நீரோடு கலந்து விடலாம்.
கற்பூர கரைசல் தெளித்து வர பூச்சித் தாக்குதல் இருக்காது.
பருத்திக்கு இயற்கை முறையில் தெளிக்கும் மருந்துகள் மற்றும் பருவம் என்னென்ன?
15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 20-ம் நாளில் களை எடுத்து 2 லிட்டர் பஞ்சகவ்யத்தை 100 லிட்டர் நீரில் கலந்து தெளித்து அப்பொழுதே 50 கிலோ கடலைப்புண்ணாக்கு தூளாக்கி செடிகளில்தூர்களில் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
கோழிகளில் உள்ள பேன்களை எவ்வாறு அழைக்கலாம்?
பூண்டு கரைசலில் கோழிகளை முக்கி எடுப்பதன் மூலம் பேன்களை குறைக்கலாம்.
பசுமாட்டில் உண்ணியை எவ்வாறு நீக்கலாம்?
புகையிலை 5 அல்லது 6 செடிகளையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் தெளிந்த நீரை மட்டும் மாட்டின் மேல் தெளிப்பதால் மாட்டில் உண்ணியை குறைக்கலாம்.
மேலும் வேப்ப எண்ணெய், சோற்றுக்கற்றாழையை தடவி விடுவதன் மூலமும் மாடுகளில் உண்ணியை போக்கலாம்.