வெட்டிவேரை வைத்து கழிவு நீரை சுத்தம் செய்யலாம். எப்படி?…

** கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய வெட்டிவேர் உதவும். மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுக்கை மூலம் கழிவு நீரை சுத்தம் செய்ய முடியும்.

** கழிவுநீர், நீர்நிலைகளில் கலந்து மாசபடுத்துகிறது. அதனால் ஆகாய தாமரை படர்ந்து வளர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு குறைந்த செலவில் உள்ளது.

** ஐட்ரோபோனிக்ஸ் முறையில் மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுக்கை கழிவுநீர் நிலைகளில் மிதக்க விடவேண்டும்.

** வெட்டிவேர் அந்த நீரில் நன்றாக வளரும். வளரும் பொழுது அந்த நீரை சுத்திகரித்து கொண்டே இருக்கும்.

** நீரில் கலந்து இருக்கும் ஹெவி மெட்டல், சோப்பு தன்மை, எண்ணை பசை போன்ற தன்மைகளை உறிந்து நன்றாக வளர்கின்றது.

** பொதுவாக மின்சாதனங்கள் கொண்டு சுத்திகரிப்பு செய்யும் மையங்கள் அருகில் உள்ளவர்கள் எந்நேரமும் மூக்கை பிடித்து கொண்டு இருக்க வேண்டும். மின்சார செலவும் அதிகம். கடைசியாக உருவாகும் கழிவை வெளியேற்ற கஷ்டப்பட வேண்டும்.

** ஆனால் இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம் வெட்டிவேர். எந்த செலவும் வைக்காமல் , தட்பவெப்ப நிலைகளை பொறுத்து கொண்டு சுத்திகரிப்பு செய்து கொண்டே இருக்கும்.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories