வெண்டை வடிகால் வசதி கொண்ட அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை உடையது.
கோ 1,கோ 2 , அர்கா, அனாமிகா,அபஹாய் , பர்பானிகிந்தி , கோ-3 வீரிய ஒட்டு ரகங்கள் போன்ற ரகங்களை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.
மிளகு செடியில் பூக்கள் உதிர்வதை எப்படி தடுக்கலாம்?
மீன் அமிலக் கரைசல் 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்..
மேலும் ஜீவாமிர்தக் கரைசலைத் தெளித்து வந்தால் பூக்கள் உதிர்வதைத் தடுக்கலாம்.
அரப்பு மோர் கரைசலை பூத்திருக்கும் பருவத்தில் தெளித்தால் பயிரின் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறைய பூக்கள் பூக்கும்.
புடலங்காய், பீர்க்கங்காய், பாகல் போன்ற பயிர்களில் ஏற்படும் வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
வேப்ப எண்ணெய் ,புங்க எண்ணெய் ,சோப்பு கரைசல் கலந்து 20 நாள் இடைவெளியில் தெளிக்கவும்.
அதிக வெப்பமும், குளிர் காற்றும் மாறி மாறி வந்தால் நாட்டு மாட்டு புளித்த மோரும்,நடுப்பதம் உள்ள இளநீரும் கலந்து தெளிக்கவும்.
வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த KNOX -ஐ (Bio மருந்து] 60 நாள் வரை {8-1o மில்லி
] 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 12 முதல் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
வைரஸ் நோய்கள் பரவக் காரணமான சாறு உறிஞ்சும் பூச்சி, தத்துப்பூச்சி ,வெள்ளை கொசு தாக்குதலை விளக்குப்பொறி மூலம் கட்டுப்படுத்தலாம்
சாண எரிவாயு கலன் அமைக்க மானியம் கிடைக்குமா?
தேசிய சாண எரிவாயு திட்டத்தின் கீழ் மானியம் மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் மூன்று மாடுகளும் ,சாண எரிவாயு கலனை நிறுவக்கூடிய அளவு வீட்டில் இடமும் உள்ள எந்த விவசாயியும் அதைப் பெறுவதற்காக காதி கமிஷனையும், மாவட்டங்களில் உள்ள சர்வோதய சங்க கதர் பவன்களையோ அணுகலாம்.
மாட்டின் பாலில் ரத்தம் கலந்து வர காரணம் என்ன?
கரவை காரர்கள் அழுத்தி பால் கறக்கும் பொழுது, இந்த ரத்தத்தின் காரணமாக காம்பு கிண்ணத்தில் உள்ள மெல்லிய ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் கசிய விடுகின்றன.
எல்லா விரல்களையும் உபயோகித்து மென்மையான அழுத்ததோடு கறந்தாலே இரத்தக் கசிவு நின்றுவிடும்.