வெயில் காலங்களில் காய்கறி பயிர்களை எப்படி பாதுகாப்பது?

நெல்லி இலை உறை அழுகல் நோய் கட்டுப்படுத்த என்ன மருந்து தெளிக்க வேண்டும்?
நெற்பயிரில் இந்த நோய் ஒருவிதபூசனத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் தூர்விடும் சமயம் .முதல் கதிர் விடும் பருவம் வரை ஏற்படலாம் முதலில் தண்ணீருக்கு அருகில் உள்ள இலைகளில் தாக்குதலை தொடங்க வேண்டும்.

நீள்வட்ட பச்சை கலந்த கருப்பு புள்ளிகள் தோன்றி பின் பெரிதாகி சாம்பல் நிற மையப் புள்ளியும் ஓரப்பகுதியில் பழுப்பு நிறம் கொண்டபகுதியாக மாறி கதிர் இலை உரையில் அழுக ல் ஏற்படுகிறது.
இதற்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசலையும் சிறுவயது முதலே கற்பூர கரைசலையும் தெளித்து விடலாம்.

வெயிலில் சமயத்தில் காய்கறிகளை பயிர்களை எவ்வாறு பாதுகாக்கலாம்?

ஜீவாமிர்தம், பஞ்சகாவியம், அரப்பு மோர் கரைசல் போன்ற இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தினால் பயிர்களில் வெயிலில் நன்றாக வளரும். அரப்பு மோர் கரைசலில் பூக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிரின் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறைய பூக்கள் பூக்கும்.

துவரையில் கருப்பு பெண் அதிகமாக உள்ளது அதை எவ்வாறு சரி செய்யலாம்?

100 லிட்டர் நீரில் 2 அரை லிட்டர் பிரம்மாஸ்திரம் மற்றும் 3 லிட்டர் கோமியம் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் கருப்பு பெண்ணின் குறைக்கலாம்.

முருங்கை மரத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு என்ன இயற்கை மருந்து கொடுக்கலாம்?

இரண்டு முறை நுனியை கில்லிவிடுவதும் மூலம் அதிக துளிர்விடும் அதிக கிலைகளை பெற்று காய்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும் மண்புழு உரம் அமிர்த கரைசல் உயிர் உரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து வேறு இடுவதால் அதிக எடை காய்களை பெறலாம்.

மீன் அமினோ அமிலம் இலைகள் மீது தெளிப்பதால் நேரிலும் விடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளை பெரலாம் மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும்.

ஆடுகளின் காலில் எலும்பு உடைந்தால் எப்படி சரி செய்யலாம்?
ஆடுகால்களில் அடிபட்டால் உடனே பிரண்டை செடியை நன்றாக அரைத்து எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் பூசி துணி கொண்டு இருக்கமாக கட்டி விட வேண்டும்.
நாளடைவில் ஆட்டின் கால்களை சரியாகி பழைய நிலைக்கு வந்துவிடும் இந்த சமயத்தில் ஆடுகளுக்கு அருகிலேயே தீவனம் மற்றும் தண்ணீர் வைத்து விடவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories