வெள்ளரியில் Poly house பயன்படுத்திய விவசாயின் அனுபவம்
திரு செந்தில் என்ற விவசாயி 30 சென்ட் நிலத்தில் Poly house பயன்படுத்தி வருகிறார் முதலில் 5 டன் வரை தொழுவுரம் போட்டு நன்றாக உழவு செய்து 3 ¼ அடிக்கு பெட் அமைக்க வேண்டும்.
அதில் லேட்டர் மெத்தேடில் சொட்டு நீர் பயன்படுத்தினால் உப்பு அடைத்தாலும் ஒன்று பிரச்சனை இல்லை அடைப்பை எடுத்துவிட்டு பயன்படுத்தலாம்
நேசனல் தோட்டக்கலை துறையில் Poly house அமைக்க 4 லட்சத்து 64 ஆயிரம் மானியமாக கொடுக்கிறார்கள்
. அது போக மீதம் நம்முடைய செலவு ஆகும்
முதலில் நான் போடும்போது Poly house க்கு போடுகிறேன் என்று சொல்லி மனு கொடுத்தவுடன் தந்து விட்டனார் இப்பொழுது அப்படி இல்லை. விண்ணப்பித்து வைத்தால் தான் வரிசைப்படி நமக்கு கிடைக்கும்.
வயலை நன்றாக உழவு செய்து கடேசி உழவின்போது அடியுரமாக 5 டன் தொழுவுரம் போட்டுள்ளேன்.
வெள்ளாயில் கில்டன் என்ற ஓட்டு ரகம் நடவு செய்துள்ளேன்.
இடைவெளி வரிசைக்கு வரிசை 3 ¼ அடியும் (ஒரு மீட்டர்) செடிக்கு செடி 30 செ.மீட்டரும் வைத்து நடவு செய்துள்ளார்.
நடவு செய்த பிறகு உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, வேம், சூடோமோனஸ், விரிடி, ஒவ்வொன்றிலும் 10 கிலோ அளவு எருவில் கலந்து போட வேண்டும்.
தண்ணீர் நன்றாக பாய்ச்சி வர வேண்டும். செடியை சனல் கயிரால் கட்டி பந்தலில் ஏற்று வதை விட வலை வாங்கி கட்டிவிட்டால் வெள்ளரிக் கொடி நன்றாக அதில் படர்ந்து எந்தவித சேதமும் இல்லாமல் இருக்கும்.
இலைப்பேன் , செம்பேனின் தாக்குதல் இருக்கும் அவற்றிற்கு ஓபிரான் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்
40 நாட்களிலேயே காய் காய்க்க ஆரம்பிக்கும்.
காய் 15 டன் வரை காய்க்கும் ஒரு கிலோ 31 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். இப்பொழுது 18 ரூபாய்க்கு வந்துவிட்டது. முதல் வருடத்திலேயே கடன் எதுவும் இருக்காது
தொடர்ந்து ஒரு வருடத்திற்கு இரண்டு முறை நடவு செய்யலாம். கேரளா, சென்னைக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். நிறைய விவசாயிகள் Poly house போட்டுள்ளார்கள்
தமிழ்நாடு அளவில் எல்லோரும் ஒன்று சேர்ந்து விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
மேலும் தற்பொழுது வெள்ளரி சாகுபடி செய்வதை விட தக்காளி, கொத்தமல்லி போன்றவையும் பயிர் செய்யலாம் என்று இருக்கிறேன்.