வெள்ளாடு வள்ர்ப்பு அனைவராலும் பரிந்துரைக்கப்படுவது ஏன்?…

** ஒரு மாட்டிற்கு ஆகும் தீவனத்தில் 6-7 வெள்ளாடுகளை வளர்த்து விடலாம்.

** இவற்றை வளர்க்கப் பெரிய வசதியான கொட்டகை தேவையில்லை.

** மழைக் காலத்தில் வீட்டின் தாழ்வாரங்களிலேயே அவை ஒதுங்கிக் கொள்ளும்.

** ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு நடமாடும் ஆடு, நடமாடும் பணம் போன்றது. நமது நாட்டினருக்கு, மந்தையில் ஆடு முந்தியில் பணம் போன்றது.

** முட்செடிகள் உட்பட எல்லா வகைத் தாவரங்களையும் உண்டு வாழக் கூடியவை. உயர்ந்த மலை, பாறைப் பகுதிகளிலும் ஏறி மேயக் கூடியவை.

** செம்மறி ஆடுகள் போலன்றித் தாமே மேய்ச்சலுக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பிவிடும்.

** வெள்ளாடுகளில் நோய்ப் பிரச்சனைகள் குறைவு.

** இறைச்சி, பால், தோல், எரு ஆகிய நான்கு பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளுக்கு அசையக்கூடிய உறுதியான மேல் உதடுகள் உள்ளதால் முட்செடிகளையும் உண்ணும் வல்லமை பெற்றவை. மேலும் நெருங்கிய கூரிய கடினமான பற்கள் உள்ளதால், சிறிய தானியங்களையும், கடினமான விதைகளையும் அரைத்து உண்ண வல்லன.

** பாலை நிலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு வாரம் மூன்று முறை நீர் வழங்கினால் போதும்.

** கடுமையான பஞ்சம் ஏற்படும்போது ராஜஸ்தான் பகுதியில் ஓர் ஆடும், ஒரு வன்னி மரமும் தம்மைக் காத்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories