வெள்ளைப் பூண்டு கழிவுகளை வாயிலுக்கு இடலாமா?

வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து வைக்கலாம்வயலுக்கு இடலாம்.. இதனால் மண் வளம் அதிகரிக்கும்.

இக்கழிவுகள் நிலத்தில் இட்டுஉழுவதனால் மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேற்புழுக்கள் வழிவதுடன் விளைச்சல் அதிகரிக்கும்.

நிலக்கடலையில் வரும் நுனி கருகல் பிரச்சனையை எப்படி கட்டுப்படுத்துவது?

நிலக்கடலையில் இந்த பிரச்சனைக்கு விதைத்த நான்காம் வாரத்திலிருந்து மூன்று முறை இலைகளில் படும்படி வேப்ப இலைச்சாற்றை 2 முதல் 5% (இரண்டு வார இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

தென்னையில் சிலந்தி பூச்சியினால் ஏற்படும் பாதிப்பு என்ன?

தென்னையில் சிலந்திப் பூச்சியானது காப்பி நிறத்தில் சுவடுகளை குறும்பில் ஏற்படுத்தும். பிறகு குரும்பை வளர்ச்சி ஏற்படும் போது இந்த சுவடுகள் காய்ந்த கரும்புள்ளிகள் ஆக மாறி குறுக்கு பிளவை உண்டாக்கும்.

இதனால் தரம் குறைந்த வளர்ச்சியற்ற சிறிய தேங்காய் உற்பத்தியாகிறது.

அத்தியை எப்படி நடவு செய்ய வேண்டும்?

அத்தி மரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

வின் பதியன்கள் அல்லது ஒட்டு கட்டுதல் மூலம் தேர்வு செய்த பதியங்களை 5.7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் .மழைக்காலங்களில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ஆட்டுக்குட்டிகளின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்?

ஆட்டுக்குட்டிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் தர தாது உப்புக்கள் அவசியமானது. எனவே கொட்டகையில் தாதுஉப்பு கட்டி ஒரு அடி உயரத்தில் கட்டி விட வேண்டும்.

நாளொன்றுக்கு 2 முதல் 3 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

சிறு துண்டுகளாக நறுக்கி ஆடுகளுக்கு பசுந்தீவனம் அளிப்பதன் மூலம் ஆடுகளில் உடல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories